உணர்ச்சி
57
செய்வது எதையும் முன்யோசனை இன்றியும் குறி ஒன்று இன்றியும் செய்யாதே. மேலும் செய்வதையெல்லாம் பொதுநலம் ஒன்றையே கருதிச் செய்.
111
நீ செய்யுங் காரியங்களில் யோசனையின்றியும் நீதி முறை பிறழ்ந்தும் நடவாதே. வெளியேயிருந்து உனக்கு ஏற்படும் துன்பங்களைப் பற்றியோ எனில், அவற்றை செயலாய் ஏற்படலாம், அல்லது தெய்வச் செயலாய் நிகழலாம். தற்செயலை நோதல் தவறாகும், தெய்வத்தைக்
குறைகூறுதலும் பொருந்தாது.
112
ஏதேனும் ஒன்றைக் குறித்து நீ துக்கப்படும் பொழுது இவ்விஷயங்களை மறந்துவிடுகிறாய்; நிகழ்வின எல்லாம் இயற்கை முறைப்படியே நிகழ்கின்றன. பிறருடைய தீச்செயல் உன்னைப் பாதிக்காது. நிகழ்வன அனைத்தும் முன்னும் நிகழ்ந்துள, இனியும் நிகழும். மனித ஜாதி அனைத்தும் ஒரு சமஷ்டியானபடியால் ஒவ்வொரு மனிதனுக்கும் மனித ஜாதிக்கும் நெருங்கிய உறவுண்டு. அது இரத்தத்தாலாவது இந்திரியத்தினாலாவது ஏற்பட்ட உறவன்று, அறிவாலாகிற உறவேயாகும். ஒவ்வொரு ஆன்மாவும் கடவுளின் அம்சமாகும். பிரபஞ்சம் அனைத்துமோ கேவலம் சித்த விருத்தியே. எல்லாவற்றிற்கும் மேலே இதை மறந்துவிடுகிறாய்: மனிதனுக்கு நிகழ்காலந்தான் சொந்தம். அதைத்தான்
அவன் இழந்துவிடுகிறான்.
113
பெருமை நீத்ததாகப் பெருமை பேசிக்கொள்ளும் பெருமையே சகிக்கக்கூடாத பெருமையாகும்.
114