பக்கம்:இதய உணர்ச்சி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

இதய


தேவர்களை வணங்குகிறாயே, தேவர்களை எங்கு கண்டாய்? தேவர்கள் உளர் என்பதை எங்ஙனம் அறிவாய்?” என்று கேட்பவர்க்கு நான் கூறும் மறுமொழி இது: தேவர்களைக் கண்ணாலுங்கூடக் காணலாம். என் ஆன்மாவைக் காணாதிருந்தும் அதை நான் மதிக்கவில்லையோ ? அங்ஙனமே கடவுளரின் சக்தியை இடைவிடாது என் அநுபவத்தில் அறிவதால் அவர்கள் உளர் என்று உணர்ந்து அவர்களை வழிபடுகின்றேன்.

115

★ ★ ★

வ்வொன்றையும் நன்றாய் ஆராய்ந்து, அதன் உண்மை என்ன, சாரம் யாது, தோற்றம் யாது என்பதை அறிந்து, மன முழுவதையும் நீதி செய்வதிலும் உண்மை உரைப்பதிலும் செலுத்துவதே மனித வாழ்வின் க்ஷேமமாகும். ஒரு நற்செய்கைக்கும் இன்னொரு நற்செய்கைக்கும் இடையில் இறைகூட வீண் நேரமின்றி இடைவிடாது நன்மை புரிந்து இன்புறுவதைவிட வாழ்வுக்கு வேறென்ன வேண்டும்?

116

★ ★ ★

ப்படி அக்கினி தனக்குள் விழும் பொருள்களை உபயோகித்து அவற்றின் பலத்தைக்கொண்டு முன்னிலும் உயரமாகக் கிளம்புகிறதோ, அப்படியே ஆன்மாவும் தனக்குத் தடையாகவுள்ளவைகளையே தன் வளர்ச்சிக்குச் சாதனங்களாக்கிக் கொள்கிறது.

நடப்பதனைத்தும் அறிவின் வளர்ச்சிக்கன்றி வேறெதற்காகத்தான் நிகழ்கின்றன? ஆகையின் ஆரோக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/60&oldid=1123695" இலிருந்து மீள்விக்கப்பட்டது