பக்கம்:இதய உணர்ச்சி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உணர்ச்சி

59


கியமான வயிறு தனக்குள் பெய்யப்பட்ட வஸ்துக்களை உபயோகித்துப் பலமடைவது போலும், அக்கினி தனக்குள் விழுபவற்றை உபயோகித்து ஒளி வீசுவது போலும், நீயும் உனக்கு நேரும் அனைத்தையும் உன்னுடைய தாக்கிக்கொள்வதற்கு இடைவிடாது

முயல்க.

117

★ ★ ★

சிற்றின்பம் வேண்டுவோர் சுகானுபவங்களை நாடுவது போல், நீயும் செய்யும் காரியங்கள் அனைத்திலும் மனித இயல்பிற்கு ஒத்தவைகளையே நாடும்வரை உனக்குத் துன்பம் இருந்து கொண்டேயிருக்கும். ஏனெனில், மனிதன் தன் மெய் இயல்பிற்கு ஒத்தவைகளை நாடுவதிலேயே இன்பம் விளையும் என்று கருதவேண்டும். அவ்விதம் நாடுவதும் அவனால் எங்கும் செய்யக் கூடியதே.

117

★ ★ ★

காலையில் எழுந்திருக்க மனமில்லாதிருந்தால் கீழ்க்கண்டவாறு நினைத்துக்கொள்: “நான் ஒரு மனிதன் செய்யவேண்டிய வேலையைச் செய்வதற்காக எழுகின்றேன். அப்படியிருக்க நான் எதற்காகச் சிருஷ்டிக்கப் பேட்டேனோ அதையும், எதற்காக உயிர் வாழ்கின்றேனோ அதையும் செய்யத் தொடங்குவதில் எனக்கு ஏன் இந்த அதிருப்தி? அல்லது படுக்கையிலேயே படுத்துக்கொண்டு சுகமாய்த் தூங்குவதற்காகச் சிருஷ்டிக்கப் பட்டேனோ?”. சிலர் அவ்விதம் தூங்குவது சுகம் தரும் என்று சொல்லலாம். ஆனால் நீ வேலை செய்வதற்காகவன்றி சுகம் அநுபவிப்பதற்காகவா சிருஷ்டிக்கப்பட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/61&oldid=1123697" இலிருந்து மீள்விக்கப்பட்டது