பக்கம்:இதய உணர்ச்சி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முகவுரை

ஸ்ரீமான் பொ. திருகூடசுந்தரம் பிள்ளை அவர்களின் நூல்களுக்கு அன்னியரின் முகவுரை அனாவசியம் என்று தமிழுலகம் சொல்லும் என்பதில் சந்தேகமில்லை. மகாத்மா காந்தியின் சத்யாகரக வியாசங்களில் பலவற்றைத்தொகுத்துத் தமிழ்செய்து ஸ்ரீமான் பிள்ளையவர்கள் தமிழருக்குப் பேருதவி செய்திருக்கிறார்கள்.

மகாத்மாவின் நூல்களை மொழிபெயர்ப்பதற் கிடையிலேயே பிள்ளையவர்கள் தமிழ் மொழியின் மீதுள்ள ஆர்வ மிகுதியால் உலகப் பிரசித்தமான இன்னொரு நூலைச் சம்க்ஷேபமாக மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். இந்நூல்தான் மார்க்க ஒளரேலியன் என்னும் ரோம சக்ரவர்த்தியின் ஆத்ம விசார ரூபமான மணிமொழித் தொகுதி. இந்நூலிற்கு உலகத்தின் அற நூல்களில் சிலவற்றைத்தான் இணையாகக் கூற முடியும். எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தால் திருவள்ளுவ தேவரின் திருக்குறளின் யோக்கியதை இந்நூலுக்கும் உள்ளது என்று சொல்லலாகும். ஆனால் இதனுள் இன்னொரு விசேஷமிருக்கிறது. திருக்குறள் எழுதியவர் இல்வாழ்க்கையினராக இருந்த போதிலும் உலக விவகாரங்களில் கொஞ்ச மேலும் சிக்கிக்கொள்ளாமல், அவற்றிற்குப் புறம்பாகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/7&oldid=1105351" இலிருந்து மீள்விக்கப்பட்டது