பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

இந்தியாவில் - இதழியல் கலை! தோற்றம்! வளர்ச்சி!தொண்டு!



ஒவ்வொரு இந்தியனும் ஆங்கில மொழியைக் கற்கவேண்டும் என்றார். இந்திய அரசியல் விடுதலைக்காகத் தொண்டாற்றினார். அதற்காகத் தனது தீவிர எழுத்துக்களைப் பயன்படுத்தினார். ஆங்கிலத்தில் ‘பிராமனிக்கல் மேக்கசின்’ (Brahmancia Magazine) என்ற பத்திரிக்கையை நடத்தினார். வங்காள மொழியில் ‘சம்பத் கெளமதி’ (Sambad Kaumdi) என்ற இதழையும், பாரசீக மொழியில் ‘மீரட்-அல்-அக்பர்’ (Mirat-ulAkbar) என்ற புரட்சி ஏட்டையும் துவக்கிப் பணிபுரிந்தார்.

மத மூடநம்பிக்கைகளை எதிர்த்து இராசாராம் மூன்று பத்திரிகைகளையும் மூன்று மொழிகளில் நடத்தி வந்ததால், தினந்தோறும் அவர் பத்திரிகைகள் எதிர்ப்புக்களைச் சந்தித்தார். அவருக்கு அரசியல் எதிர்ப்புகளும், சமுதாயத்தில் பழமை விரும்பிகளின் போராட்டங்களும் மதவாதிகளின் கண்டனங்களும் மலைபோல் குவிந்தன.

இராசாராம் நடத்திய வங்கமொழிப் பத்திரிகையில் பணிபுரிந்த ஆசிரியர் ஒருவர், அவரது பத்திரிகையிலிருந்து விலகி, அவருக்கு எதிர்ப்பாளர்கள் யார்யாரோ அவர்களுடன் அணி சேர்ந்துக் கொண்டு, ‘சமாச்சார் சந்திரிகா’ (Samachar Chandrika) என்ற ஓர் இதழை நடத்தி, இராசாராமைக் கடுமையாக எதிர்த்து எழுதினார்.

அதே நேரத்தில் இராசாராம் கிறித்துவப் பாதிரிகள் இந்து சமயத்தைத் தாக்கி எழுதும் கேள்விகளுக்குப் பதில் கூறும் நிலையும் ஏற்பட்டது. எழுதினார், கடுமையாக எழுதினார். புரட்சிக் கருத்துக்களை மக்களுக்கு விளக்கிக் கூறி, தனது கொள்கைகளில் வெற்றியும் பெற்றார். அப்போதுதான் இராசாராமுக்கு ஜேம்ஸ் சில்க் பக்கிங்ஹாம் “James Silk Bucking hom” என்பவர் நண்பரானார். இருவரும் இணைந்து எல்லா எதிர்ப்புக்களையும் சமாளித்தார்கள். பத்திரிகைச் சுதந்தரத்தையும், அதன் மரியாதை மதிப்பையும் காத்திடப் பெரிதும் அவர்கள் போராடினார்கள்.

ஜேம்ஸ் சில்க் பக்கிங்ஹாம் என்ற இந்த பத்திரிகையாளர் இங்கிலாந்தில் பிறந்து, 1786-ஆம் ஆண்டு முதல் 1855 வரை