பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

115


 பத்திரிகையின் நிறுவனரும் ஆசிரியருமான ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தியும், ‘கலைமகள்’ என்ற இலக்கிய மாத இதழின் ஆசிரியராக இருந்து மறைந்தவருமான கி.வா. ஜகநாதனும் மாவர் - அவர்கள் காலமானார்கள்.

‘தேசபக்தன்’ என்ற பத்திரிகையின் நோக்கத்தைப் பற்றி திரு.வி.க. எழுதுகையில் : ‘தேசபக்தன்’ சுதந்திரத்தை விரும்புகிறான். சுய ஆட்சி கேட்கின்றான். இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் சகோதரத்துவத்தை உண்டு பண்ணுகின்றான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் சுப்பிரமணிய ஐயர்; வெள்ளையர் ஆட்சி அவருக்குக் கொடுத்த ‘சர்’ பட்டத்தைத் தூக்கி எறிந்த நேரத்தில், ‘மயிலை முனீந்திரர்’ என்று தலைப்பிட்டு 21.6.1918ல் அவர் ஒரு கட்டுரை வரைந்தார். அதைப் படித்த ஐயர், திரு.வி.க-வை மிகவும் புகழ்ந்தார்.

அவரது பாராட்டுதலைப் படித்த திரு.வி.க. அதற்குப் பதிலளித்தபோது, நானா எழுதினேன்? தங்களது வீரத்தில் தோய்ந்த பக்தி அதை எழுதியது. தாங்கள் மூலம் - யான் கருவி என்றார்.

பிண வெறியன் டயர் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்தியதற்கு முன்பு வரையில், அண்ணல் காந்தி உட்பட்ட எல்லா காங்கிரஸ் இயக்கத் தலைவர்களும் பிரிட்டிஷ் ஆட்சி மீது ஓரளவு நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதனால், அந்த நேரத்துப் பத்திரிகைகளில் தேச பக்தியுடன் ராஜ பக்தி விசுவாசமும் இணைந்திருந்தது. திரு.வி.க.வின் பத்திரிகையும் அந்த அன்பையே எதிரொலித்தது.

ஜெனரல் டயர் நடத்திய துப்பாக்கி வேட்டையைப் பார்த்த காந்தியடிகள், பிரிட்டிஷ் ஆட்சியை ‘சைத்தான் ஆட்சி’ என்று அறிவித்தார். அவரது கருத்து நாடெங்கும் பிரதிபலித்தது.

அடிகளின் கருத்தறிவிப்பிற்குப் பிறகு, அப்போதையத் தமிழ்ப் பத்திரிகைகளில் மட்டுமல்ல, இந்திய இதழ்கள் அனைத்திலும் ராஜ பக்தி மறைந்து, தேச பக்தியே காட்சி தந்தது.