பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

11


விளக்கி விரித்துரைக்கும் தகுதிகளோடு - அந்த எழுத்துக்கள் எழுதுபவரால் ஆளப்படுவதால், எழுத்துக்கள் ஒரு கருத்து வடிவமாக ஆட்சி செய்யப்படுவதால்; அந்த ‘ரைட்டர்’ (writer) என்ற பெயர்ச் சொல்; எழுத்தாளர் - நூலாசிரியர் - எழுத்து முறைகளைக் கற்பிக்கும் கையேட்டாளர் என்ற தகுதிகளைப் பெற்றதால் - அந்தச் சொல்; எழுத்துக்களை ஆட்சி செய்கின்ற எழுத்தாளர் என்ற பெருமையோடும் புகழோடும் அறிவு உலகத்திலே வலம் வருகிறது.

அந்த எழுத்துகள்; எழுத்தாளர் என்ற தொழிலில் வளத்தோடும், நலத்தோடும், பலத்தோடும் அறிவாட்சி செய்வதால், அவை ‘ரைட்டர்ஷிப்’ (writership) என்ற எழுத்தாண்மைப் பெருமையைப் பெற்று, உலகத்தை உலுக்கி, உற்சாகப்படுத்தி, புரட்சியை உருவாக்கி, இறுதியில் அறிவு மணம் கமழும் தென்றலாகவும் வீசுகின்றன.

இத்தகைய எழுத்தாளர்கள், செயல், எழுத்துத் திறன், எழுத்துக் கலை, இலக்கியப் படைப்பு, ஏடாக்கம், இலக்கியப் பத்திரிகை, இலக்கிய, பொருளாதார, அரசியல், அறிவியல் சார்ந்த நூற்கள், கட்டுரைகள், கவிதைகள், எழுதப்பட்ட வரலாறுகள், ஆவணங்கள், ஓர் இனத்தின், சாம்ராச்சியத்தின், பண்பாடு, நாகரிகங்களின் வீழ்ச்சிகளையும், எழுச்சிகளையும், உணர்ச்சிகளையும், புரட்சிகளையும், முன் கூட்டியே அறிவிக்கும் நிகழ்ச்சிகளாக உலகத்தில் இன்றும் நடமாடி வருகின்றன.

இதைத்தான் கி.பி. 1694 முதல் 1778 வரை வாழ்ந்த பிரெஞ்சு நாட்டுப் பேனா முனை புரட்சிவாதியான வால்டேர் (voltaire), “வாளின் வலிமையை விட எனது பேனா முனை கூர்மையான பலம் வாய்ந்தது. எனது எழுதுகோல் ஒரு கொடுங்கோல சாம்ராச்சியத்தையும் அழிக்கும். ஒரு செங்கோல் ஆட்சியையும் உருவாக்கும்” என்றான்.

அவனது பேனா முனை தான்; உலகிலே சமையப்பற்றின்மை, சமைய நிலை, ஐயப்பாட்டு வாதக் கோட்பாட்டை உருவாக்கி; பிரெஞ்சு நாட்டின் புரட்சிக்கு விதை போன்று விளங்கியது.

வால்டேர், ரூசோ, மான்டெஸ்கியூ போன்ற எழுத்துலக அரிமாக்கள் ஏந்திய எழுதுகோல்களின் அற்புதங்கள், அந்தந்த