பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

சுதந்தர இயக்கத்தில் இருபதாம் நூற்றாண்டு இதழ்கள்


பிணையத் தொகை கட்ட வேண்டும் என்றார்கள். இந்தக் கெடுபிடி முறையால் எட்டு பத்திரிகைகள் பழிவாங்கப்பட்டன.

பாலகங்காதர திலகர் மீதும், அவரது பத்திரிகை மீதும் அரசுக்கு எதிராகச் செயல்பட்ட வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வாறு பல பத்திரிகைகளை அரசு ஒடுக்க நடவடிக்கை மேற்கொண்டது.

அரசை எதிர்த்து

இதழ்கள் எதிர் நீச்சல்

ஆங்கில ஏகாதிபத்தியம் பத்திரிகைகளை இவ்வாறு பழி வாங்கி, அதன் ஆசிரியர்களைச் சிறையிட்டது. அவர்களை நாடு கடத்தி வாட்டி வதைத்தது. ஆனாலும், எந்தப் பத்திரிகை ஆசிரியரும் பயந்து ஓடிப் பதுங்கிக் கொள்ளவில்லை. வருவது வரட்டும் என்று அரசு எதிர்ப்புகளைத் தங்களது பத்திரிகை வளர்ச்சிக்கு உரமாக்கிக் கொண்டார்கள்.

அர்சு எதிர்ப்புக்கு அஞ்சாத பத்திரிகைள் சில : திலகரின் ‘கேசரி’, அரவிந்தரின் ‘வந்தே மாதரம்’, விவேகானந்த அடிகளாரின் சகோதரர் பூபேந்திர நாத்தின் ‘ஜூகந்தா’ பிரமோபந்தா உபாத்தியாயாவின் ‘சந்தியா’, பிரோஷ்ஷா மேதாவின் ‘பாம்பே கிரானிக்கிள்’, மெளலான முகமுது அலியின் ‘காம்ரேட்’, அபுல்கலாம் ஆசாதின் உருது இதழ், ‘அல்-ஹிலால்’, வி.எஸ். சீனிவாசச்சாரியார் ‘செர்வெண்ட் ஆஃப் இந்தியா’.

மேற்கண்ட எல்லா பத்திரிகைகளும் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து கர்ஜனையிட்டுக் கொண்டிருந்த வேங்கைகளாக உலாவின.

காந்தியடிகளின்

‘யங் இந்தியா; ஹரிஜன்’

மகாத்மா காந்தியடிகள் இந்திய விடுதலைப் போர் இயக்கமான அகில இந்திய தேசியக் காங்கிரசில்; 1920-ஆம் ஆண்டில் காலெடுத்து வைத்த பின்பு, காங்கிரஸ் இயக்கப்