பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

131


போக்கில் அகிம்சையும், அற்புதமும் குடிகொண்டு கோலோச்சின. அதனால் இந்திய அரசியலில், அடிக்கடி போராட்டங்கள் உருவாகி புதிய புதிய திருப்பங்கள் விளைந்தன.

அகிம்சை அண்ணல் காந்தியடிகள், ஏற்கெனவே தென் ஆப்ரிக்காவில் ‘இந்தியன் ஒப்பினியன்’ (indian Opinion) என்ற பத்திரிகையை நடத்திப் போதிய அனுபவம் பெற்றிருந்தவர் என்பதால், இந்திய மண்ணில் விடுதலைக்காக உழைத்திடும் கருவிகளென ‘யங் இந்தியா’, ‘ஹரிஜன்’, ‘நவஜீவன்’ ஆகிய பத்திரிகைகளைத் துவக்கி வெற்றிகரமாக நடத்தினார். இவர்தான் தேசிய இயக்கப் பத்திரிகைகளுக்கு தக்க அறிவுரை கூறும் தந்தையாக இருந்தார்.

இதழ்களை வருவாய் இழப்பில் நடத்தாமல் இலாபத்தில் நடத்தும் வழியை உருவாக்கி, உலகிலேயே அடிகள் ஒரு பெரும் பத்திரிகை ஆசிரியர், நிறுவனர், நடத்துனர் என்ற நற்பெயர்களை எடுத்து, அதை நிலைத்து நிற்கவும் வழி காட்டியவர் காந்தி பெருமான். அவர் நடத்திய எல்லா ஏடுகளும் ஓர் உன்னதமான உயர்ந்த இலட்சியத்தோடு நடந்தவைகளே தவிர, பணத்துக்காக எதையும் எழுதலாம் என்ற கீரர்கள் போக்கை அறியாதவர், தெரியாதவர்! எனவே, அந்தப் பத்திரிகைகளை அறநோக்கோடும், அகிம்சைப் போக்கோடும் நடத்திக் காட்டியவர் அடிகள்.

பத்திரிகைப் பணியை காந்தி அடிகள் தன்னுடைய வாழ்க்கைக் குறிக்கோளுக்குரிய கலங்கரை விளக்கமாக்கிக் கொண்டார். எவ்வாறெனில், அவருடைய குறிக்கோள் அன்றுள்ள கடுமையான அரசியல் சூழலில், ஆயுதம் ஏந்தா அறப்போர் தத்துவத்தோடு நேரடித் தொடர்புக்கேற்ற சத்தியாக்கிரகத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தி, அதை ஓர் ஒப்பற்ற அரசியல் ஆயுதமாக்கி, அனைவரும் ஏற்கும் பண்டை மக்கள் இடையே நிலை நாட்டினார். இதுவே ஓர் அற்புதமன்றோ அரசியல் உலகில்?

அதனால்தான் அண்ணல் ஆங்கில அடக்கு முறைகளைப் பற்றித் தனது ‘யங் இந்தியா’ ஏட்டில் ஒருமுறை