பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

137


சங்கராச்சாரியார் ஆரிய இனத்தவர்களின் பெருந் தலைவர். இவர்கள் இடையே திராவிட எதிர்ப்பு, பிராமண ஆதரவு மனப்பான்மை தோன்றியது ஏன்? இதுதான் திராவிட-ஆரிய இன அடையாள உயர்வு தாழ்வு மனப்பான்மை! ஆகும்.

மதச்சார்பின்மை என்று கூறப்படும் ஒரு நாட்டில் இந்த இன பேத வாதங்கள் உருவாகலாமா? உருவாவதற்கு அரசுகளே காரணமாக இருக்கலாமா? அந்த நிலைமைகள் ஏற்படும்போது, திராவிடன் - தன்னை - தன் இனத்தை உயர்வாக மதிப்பதிலே என்ன தவறு? இந்த எண்ணத்தைத்தான் பாவேந்தருடைய மேலே உள்ள இனப்பெயர் பாடற்பகுதி நமக்கு வலுவூட்டுகிறது. மீண்டும் மீண்டும் நான் திராவிடன் என்று தோள் தட்ட வைக்கின்றது.

எனவே! பகுத்தறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் கண்ட சுயமரியாதை இயக்கம்தான் தமிழ்நாட்டின் வரலாற்றையே மாற்றிய இயக்கமாகும் என்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி. வீரமணி கூறுவதும் உண்மை தானே!

தந்தை பெரியார் கண்ட திராவிடரியக்கத்தை, அதன் கொள்கைகளைப் பலப்படுத்திட, அந்த இயக்கத்தின் சார்பாக, எண்ணற்ற திராவிடரியக்கப் பத்திரிகைகள் வெளிவந்துள்ளன. அவற்றை சற்று விரிவாகவே இப்போது அறிவோம்.

பெரியார் ‘குடியரசு’,

‘விடுதலை’ பத்திரிகைகள்

தமிழ்ப் பத்திரிகை உலகமானாலும் சரி, திராவிடர் இயக்கப் பத்திரிகைகளானாலும் சரி தந்தை பெரியார் அவற்றுக்கு பெருந்தொண்டு செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியிலே அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தபோது, ‘குடியரசு’ என்ற பத்திரிகையைத் துவக்கி, தனது கட்சிப் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தினார்.

இந்திய விடுதலைப் போர் கொள்கைகளுக்கும், அண்ணல் காந்தியடிகளின் போராட்டங்களுக்கும் முன்னோடியாக விளங்கியவர் பெரியார்! அப்போது புதிய பத்திரிகையாகத் துவக்கப்பட இருந்த எஸ்.எஸ். வாசன் அவர்களுடைய ‘ஆனந்த-