பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

பத்திரிகை ஓர் அறிமுகம்


நேரங்களில் உலகையே உலுக்கின என்றால், அவை வரலாறு படித்தோருக்கு நன்கு புரியும்.

வியக்கத்தக்க வகையில் இன்று பத்திரிகை எழுத்துக்கள் உலகில் பரபரப்பூட்டி வருவதற்கு அவர்களைப் போன்ற பலர் காரண கர்த்தாக்களாக விளங்கி வருகிறார்கள்.

பத்திரிகை என்று
பெயர் வந்ததது ஏன்?

‘பாஸ்வெல்’ என்ற இங்கிலாந்து எழுத்தாளர், 1785-ஆம் ஆண்டில், “The Journal of a Tour to the Hebrides” என்ற நூலை எழுதினார். பாஸ்வெலும், டாக்டர் ஜான்சன் என்ற இருவரும் ஸ்காட்லாந்து நாட்டைச் சுற்றிப் பார்த்திட கி.பி. 1773-ஆம் ஆண்டில் பயணம் செய்தபோது எழுதப்பட்ட நூல் அது.

பாஸ்வெல் எழுதிய அந்தப் பயணக் கையேட்டுக் குறிப்பை; டாக்டர் ஜான்சனும் மற்றவர்களும், படித்து முடித்திட காலதாமதமானது என்பதால், அந்தப் பயணக் குறிப்புக்களைச் ‘சுற்றுப்பயணம்’ (Tour) என்ற பெயரில் அவர்கள் அதைப் புத்தகமாக வெளியிட்டார்கள். அந்த நூலைத்தான் இங்கிலாந்து நாடு முதன் முதலாக “Journal” என்று குறிப்பிட்டது.

இங்கிலாந்து நாட்டில் அடிக்கடிக் கொள்ளை என்ற நோய் உண்டாகி; மக்கள் ஒழுக்க முறை அழிவுக்கேடுகளுக்கு மூலகாரணமாகப் பல செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. அவற்றைப் பெரிய அளவில் தொகுக்கப்பட்ட சம்பவங்களடங்கிய தொகுதிக்கு “Journal of the Plague Year” “கொள்ளை நோய் ஆண்டின் நாட்குறிப்புச் சுவடி” என்று பெயரிடப்பட்டது. இந்த நூல் பெயரும் ஜெர்னல் என்ற வகையில் சேர்க்கப்பட்டது.

பொதுவாகவே, ஜெர்னலிசம் Journalism என்ற இங்லீஷ் மொழிச் சொல்: டயர்னல் Diurnal என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பிறந்தது என்று மொழியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்த இங்லீஷ் வார்த்தையை நம்மவர் இதழியல் என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.

“Brewer’s Dictionary, Phrase Fabule” என்று இலண்டனில் வெளியிட்டுள்ள அகராதியில் “Journal Applied to News Papers,