பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்


 தமிழர்கள் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும் சமுதாய முரசாக அன்று நடமாடியது.

காரைக்குடி முருகப்பர்

‘குமரன்’ பத்திரிகை!

காரைக்குடி சொ. முருகப்பர் பத்திரிகை உலகில் சுயமரியாதைக் கருத்துக்களைப் பரப்பிட பெரும் புரட்சி வீரராய் திகழ்ந்தவர். செட்டி நாட்டு மண்ணில் துணிந்து விதவைத் திருணம் செய்து கொண்ட உணர்ச்சி வேங்கை.

மத மூடத் தன்மைகளை எதிர்த்து மறுமணம், கலப்பு மணம், காதல் மணம், சடங்குகள் அற்ற மணம், சிக்கன மணம், விதவை மணம் என்ற அறுவகை தன்மைகளைக் கொண்ட திருமணத்தைத் தமிழ்நாட்டிலேயே முதன் முதலில் செய்து கொண்ட ஒரே ஒரு சீர்திருத்தப் புரட்சிப் பத்திரிகையாளர் திரு. சொ. முருகப்பர்.

காரைக்குடி நகரிலிருந்து குமரன் என்ற பத்திரிகையை நடத்தி, செட்டி நாட்டு மண்ணிற்கு விழிப்புணர்ச்சியை ஊட்டியவர் என்ற அழியாப் புகழைப் பெற்ற மாவீரர் முருகப்பர்.

“Rationalist’

எஸ். இராமநாதன்

வ.வே.சு. ஐயர் சாதிபேத குருகுலப் போராட்டத்தை எதிர்த்தவர். வகுப்புரிமைப் போராட்டத்துக்காக வாதாடியவர் எஸ். இராமநாதன் என்ற பத்திரிகையாளர்.

சென்னை மாநிலத்திலேயே சட்டப் படிப்பில் முதன்முதல் M.L. பட்டம் பெற்ற கா.சு.பிள்ளை, எம்.எல். பிள்ளை என்று புகழ் பெற்றதைப் போல, தமிழ்நாட்டிலேயே B.A., தேர்வில் முதல் மாணவராக வெற்றி பெற்ற B.A. பிள்ளை எனப்படும் காந்திமதி பிள்ளை போல சென்னை மாநிலத்திலேயே M.A. தேர்வை எழுதி முதல் மாணவர் என்ற தகுதியைப் பெற்ற எம்.ஏ. இராமநாதன் ஆவார் இவர். உலக நாடுகள் பலவற்றுக்கு தந்தை பெரியாருடன் பயணம் செய்த வித்தகர். பெரியாருடையை கருத்துக்களை. அவருடைய மேல்-