பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

145


நாட்டுச் சுற்றுப் பயண உரைகளை அந்தந்த ஊர்களில் இங்லீஷில் மொழிப் பெயர்த்துப் பேசிய மிகச் சிறந்த அறிஞராகத் திகழ்ந்தவர் எஸ். இராமநாதன்.

சென்னையில் 31.12.1933 அன்று நடைபெற்ற நாத்திகர் மாநாட்டில், ‘கடவுள் நம்பிக்கையை முழுமையாக ஒழிக்க வேண்டும்’ என்ற தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய இந்த மேதை, 21.12.1933ஆம் ஆண்டில் அண்ணல் காந்தியடிகளைத் தனது சுயமரியாதைக் குழுவினருடன் சந்தித்தபோது, காந்தியடிகள் தம்மை, ‘தாம் ஒரு விஞ்ஞானி’ என்று எஸ். இராமநாதனிடம் கூறியபோது, அவரிடமே தைரியமாக, நேருக்கு நேராக ‘அல்லர் என்று’ மறுத்துரைத்த துணிவுடைமை மிக்கவர் இராமநாதன்.

இத்தகைய அஞ்சாநெஞ்சர் ஆங்கிலத்திலும்; தமிழிலும் கல்வியாளர்களும், புலமையாளர்களும் வியக்கத்தக்கப் பேச்சாளராக விளங்கினார் என்றால் இது சாமான்யமான அறிவுடைமையாகுமா?

இந்திய தேசியக் காங்கிரஸ் தலைவர்களாக அப்போது விளங்கிய பட்டாபி சீத்தாராமையா, டைகர் என்.எஸ். வரத்தாச்சாரி ஆகியோரிடம் Supersition of Khadi அதாவது, கதர் ஒரு மூடநம்பிக்கைக் கொள்கை என்று வாதித்தார் என்றால், அவரது புலமைக்கு வேறு சான்று என்ன வேண்டும்?

இத்தகைய ஓர் அரிய அறிஞர் “Rationalist” என்ற ஓர் ஆங்கிலப் பத்திரிகையை நடத்தினார். அந்தப் பத்திரிகை எஸ். இராமநாதன் அவர்களை இந்தியாவிலேயே ஒரு சிறந்த ஆங்கிலக் கட்டுரையாளர் என்ற புகழ் மகுடத்தைச் சூட்டி அழகு பார்த்தது.

ஒரு முறை எஸ். இராமநாதன், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சில தோழர்களுடன் சென்றார். பார்ப்பன பட்டர்களிடம் தான் எடுத்துச் சென்ற தேங்காய், பழத்தைக் கொடுக்காமல், தாங்களாகவே உடைத்து அவர்கள் வழிப்பட்டுக் கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியைக் கண்டு ஆத்திரம் பொங்கிய அர்ச்சகர்கள் அவரையும், உடன் சென்ற தோழர்களையும்