பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்


கோயிலுக்குள்ளேயே வைத்து, வெளிக் கதவைப் பூட்டி விட்டார்கள். இந்த நிகழ்ச்சி மதுரை நகரையே திணறடித்து விட்டது.

‘ரேஷனலிஸ்ட்’ பத்திரிகையில் இந்த நிகழ்ச்சியைப் படித்தவர்கள், இந்தச் சமுதாயத்தின் இழிந்த கேட்டினை ஒழிக்க வந்த சமத்துவமனிதர் என்று அவரையும், அந்தப் பத்திரிகைத் துணிவையும் பாராட்டதவர்களே அப்போது இல்லையாம்!

தோழர் எஸ். இராமநாதனின் பத்திரிகையான ‘ரேஷனலிஸ்ட்’, சமுதாய சமத்துவத்திற்காக அரும்பாடுபட்ட ஒரு பத்திரிகை என்ற புகழைப் பெற்ற பத்திரிகையாக இருந்த்து என்பது பத்திரிகையாளர் உலகுக்கும் ஒரு பெருமைதானே!

ஜே.எஸ். கண்ணப்பர்

‘திராவிடன்’ பத்திரிகை

ஜே.எஸ். கண்ணப்பர் என்றால், ஜனக சங்கர கண்ணப்பர் என்பது முழு பெயர். இவர் பெரியார் அவர்களுடன் காங்கிரஸ் இயக்கத்தை விட்டு வெளியே வந்து, ‘திராவிடன்’ என்ற பத்திரிகையின் பொறுப்பாளரானார். அரிய கட்டுரைகள் பல எழுதி திராவிட மக்கள் இடையே விழப்புணர்வுகளை உருவாக்கிய ஒரு சீர்திருத்த குணமுடைய பத்திரிகை ஆசிரியராகத் திகழ்ந்தார்.

ஒருமுறை பெரியாருடன் சீர்காழி எனும் நகருக்குள் வந்த போது, அங்கு ஜே.எஸ். கண்ணப்பருடன் வாழ்ந்த பிராமண அடிமைகள் சிலர், “கண்ணப்பன் பறையன், இராமசாமி சக்கிலியன் இருவரும் கோயிலுக்குள் நுழையப் போகிறார்கள், கோயில் தீட்டாய் விடும்” என்று சுவரொட்டிகளாலும் விளம்பரத் தட்டிகளாலும் இழிவுபடுத்தினார்கள் என்று “சுயமரியாதைச் சுடரொளிகள்” என்ற நூல் கூறுகின்றது.

திருவண்ணாமலை நகருக்கு ஒருமுறை கண்ணப்பர் தோழர்களுடன் சென்றபோது, ‘பறையர்கள் வருகிறார்கள்’ என்று பார்ப்பனர்கள் கோயிலையே இழுத்துப் பூட்டி விட்டார்கள் என்றும் மேற்கண்ட நூல் குறிப்பிடுகின்றது.

ஜே.எஸ். கண்ணப்பர் திராவிடன் பத்திரிகை ஆசிரியராக இருந்து, அதன் பொறுப்பாளராக பணியாற்றியவர் என்றாலும்,