பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

பத்திரிகை ஓர் அறிமுகம்


நிகழ்ச்சிகள், நாடாளுமன்றம் - நீதிமன்றம், மருத்துவமனைச் சம்பவங்கள், ஊராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் நடைபெறும் அன்றாட மக்கள் நலன் பணிகளின் நிறை-குறைகள் போன்றவற்றை வெளியிடும் ஒரு குறிப்பேட்டின் தொகுப்புக்கு ஜெர்னல் என்ற பெயர் என்று கூறுகின்றது அந்த டிக்‌ஷனரி.

“கற்றறிந்த, அறிவு வளம் நிரம்பிய, சமுதாயத்தில் ஒன்றிணைந்து கூடி வாழ்கின்ற மக்களது அன்றாட வளர்ச்சிக்காக; வாழ்க்கையையே தொழிலாகக் கொண்டவர்களுக்குரிய செய்தித் தாளாக, போர்க் காலத்தில் செருமுனைக்குரிய ஆயத்த ஆயுதங்களைச் சேர்த்து வைக்கும் பாசறைகள் போல, பல எழுத்தாளர்களின் கட்டுரைகள் அடங்கிய ஒரு பருவ இதழ்ச் சுவடியாக அல்லது தினப் பத்திரிகை போன்ற, ஒரு நாட்குறிப்பு ஏடாக, இரட்டை எண்ணிக்கை முறையில் வெளி வருவதுதான் ஜர்னல் என்பதின் இலக்கணம்.

அந்தப் பத்திரிகையில் அன்றாடம் வெளிவரும் ஒவ்வொரு கணக்கும், படிப்பவர் நெஞ்சில் இருமடியாகப் பதிய வைக்கும் கணக்காண்மை முறையில் அமைந்திருக்குமாம் ‘ஜர்னல்!’.

அந்த இருமுறை - அதாவது Double Entry முறை என்பவை - என்னென்ன தெரியுமா?

அவற்றுள்ள ஒன்று ஜெர்னலிசம் என்ற பத்திரிகை அமைப்புக் கொள்கையோடு கிரேட் பிரிட்டன் நாட்டை வலம் வரும் ஏடாம். மற்றொன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பரவி வளர்ந்த கணக்காண்மை முறை இதழாம்.

எனவே, டையர்னல் என்ற இலத்தீன் மொழிச் சொல்லுக்கு “அன்றன்று” என்று பொருள். அதனால் ஜர்னல் என்பதற்குச் சரியான உட்பொருள் - தினந்தோறும் நாட்டில் நடப்பதை எழுதி வைக்கும் பத்திரிகை, ஓர் ஆவணம் என்றே ஆங்கில அகராதிகள் நமக்கு அறிவிக்கின்றன.

ஆனால், “தமிழ் இதழ்கள் தோற்றம், வளர்ச்சி” என்ற நூலில், அ.மா. சாமி எனும் பத்திரிகையாளர், ஜர்னல் என்றால் ‘இதழ்’ என்று கூறுகின்றார். தமிழ் அறிஞர்கள் அந்தச் சொல்லையே நாளடைவில் ‘பத்திரிகை, செய்தித் தாள்’