பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

161


மட்டுமே வாரா வாரம் வெளியிட்டதால், 50 ஆயிரம் பிரதிகள் விற்றன என்றால், அது அதிசயமல்லவா?

அறிஞர் அண்ணா பொதுக்கூட்டம் ஒன்றில் ‘தலைவர் அவர்களே’ என்று அழைப்பதிலிருந்து வணக்கம் கூறிப் பேச்சை முடிக்கும் வரையுள்ள ஒரு மணி நேரப் பேச்சை, தமிழ்நாட்டில் அவர்பேசும் ஒரு கூட்டப் பேச்சை, அப்படியே வெளியிட்டு அதை விற்பனை செய்தது ‘மாலைமணி’ பத்திரிகை.

அண்ணா அவர்கள் பேச்சை நேரில் கேட்டு இன்புறுவது போல, கட்சித் தோழர்களும், தலைவர் அவர்களே என்று அண்ணா பேச ஆரம்பித்ததிலிருந்து, அவர் முடிக்கும் வரையுள்ள பலதரப்பட்ட கருத்துக்களைக் கட்சிக்காரர்கள் ஒருசேரப் படிக்கும் ஒரு வழக்கம் இருந்ததை, அந்தப் பத்திரிகை அதை முழுமையாகப் பயன்படுத்தி கொண்டதால், வாரந்தோறும் மாலை மணி வார ஏடு ஏறக்குறைய 50 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனையானது.

அண்ணாவின் ஒரே ஒரு பேச்சு மட்டும் அவருக்கு ஒரு வாரத்துக்குரிய கட்டுரையாக இருந்தால் போதும். அந்தப் பேச்சு இதழ் தமிழ்நாட்டில் 50 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகும். ஓர் ஊரில் உள்ள ஒவ்வொரு மன்றமும் கட்சிப் பத்திரிகைகளை அந்த மன்ற உறுப்பினர்கள் அவரவர் பணத்தில் வாங்கி வழங்குவர். ஒரு பத்திரிகையை ஒரு மன்றத்திலுள்ள 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் படிப்பார்கள். இப்படித்தான் பி.எஸ். இளங்கோ மாலை மணி வளர்ந்தது என்றால், இது எப்படிப்பட்ட பத்திரிகை பலம்? தொண்டு? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றல்லவா?

இந்தப் பத்திரிகை நாளேடானது! எப்போது? முதன் முதலாக ‘முரசொலி’ மாறன் நாடாளுமன்றத்திற்கு வேட்பாளராகத் தேர்தலில் நின்றபோது ஆசிரியர் பி.எஸ். இளங்கோ, புலவர் கலைமணியை மாலை மணி நாளேட்டிற்குத் துணை ஆசிரியராக நியமித்துக் கொண்டார்! அந்த ‘மாலை மணி’ நாளேட்டில் தான் ‘எரியீட்டி’ என்ற அரசியல், இலக்கிய, கலை உணர்வோடு கலந்த கட்டுரை நாள்தோறும் ஒன்னரை பக்கம் வெளிவரும். மாலை மணி பத்திரிகை வெளியிடும் எரியீட்டி கட்டுரைக்காக தினந்தோறும் 60 ஆயிரம் பிரதிகள் விற்றன.