பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்


 எரியீட்டி

சவுக்கடி

‘மாலை மணி’யிலிருந்து தனியாக வந்து ‘எரியீட்டி’ நாளேட்டைப் புலவர் என்.வி. கலைமணி துவக்கினார்.

ஆளும் கட்சியை ஆதரித்து, நியாய மனதோடு விமர்சிக்கும் எந்த எதிர்க்கட்சித் தலைவர்களையும், நிலவை உடைத்து அதன் ஒளியை மையமாக்கி சந்தன மணம் கமழும் தென்றல் நடை இதத்தோடு பதமாக அவர்களை வரவேற்றுப் பதிலை எழுதும். எரியீட்டி’ தோழமைக்கு இது இலக்கணமாகும்.

அரசியல் பகைக்கு இலக்கணம் என்ன தெரியுமா? கதிரவனை நொறுக்கி அதன் கனல் வெள்ளத்தை மையாக்கி, கோடை நெருப்புச் சுடரொளிகள் கலந்த எழுத்துக்களால் அதன் எதிரிகளின் அரசியல், சிந்தனைகளைக் கண்டனம் செய்யும்! இதுதான் எரியீட்டி!

நாள்தோறும், மாலை தோறும் எரியீட்டி மேற்கூறிய இலக்கணங்களோடு வெளிவரும். இப்படிப்பட்ட எரியீட்டி பத்திரிகையைப் புலவர் என்.வி. கலைமணி என்ற நான் தான் நடத்தினேன்!

சவுக்கடி

நாளேடு

‘சவுக்கடி’ பத்திரிகையைப் பற்றி இவ்வளவு சுருக்கமாக ஏன் இங்கே கூறுகிறோம் என்றால், கட்சிப் பத்திரிகை நடத்துவோர்; எழுதும்போது தீவிரவாதிகளாகி விடக்கூடாது. வரம்பு மீறிய உணர்ச்சியாளர்களாகக் கூடாது. அதிக கட்சி அக்கறை காட்டுபவராக இருந்தால், அவர்கள் வாழ்க்கையிலே உருப்படவே முடியாது. பராரியாகும் பரிதாப நிலை உண்டாகும். உண்மைக்கு அரசியல் உலகம் தரும் மரியாதை இது!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. திறமையான வழக்கறிஞராக இருந்தும், கட்சியின் தீவிரவாத உணர்வுடையவராக அவர் இருந்ததால், அவரது கடைசி காலம் என்ன? சொக்கலால் ராம் சேட பீடியை விற்று, மண்ணெண்ணெயை அளந்து ஊற்றிப் பிழைக்கும் நிலையும் தானே அவருக்கு அரசியல் தந்த பரிசு? அவர் சிறை மீண்டபோது அவரைப் பார்த்து வரவேற்க