பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

163


வந்தவர் எத்தனை பேர்? ஒரே ஒருவர்! அவரும் குட்ட நோய் தியாகி! ஆம்! அவர்தான் சுப்பிரமணிய சிவா! ‘ஞானபானு’ பத்திரிகை ஆசிரியர் அவர்!

தீவிர உணர்ச்சி கொண்ட மக்கள் கவி பாரதியார் நிலை என்ன? அவர் உயிரோடு வாழ்ந்தபோது வயிறார உண்ண முழுமையான உணவுண்டா? அவர் பிணம் பின்னாலே எத்தனை தேசியவாதிகள் வந்தார்கள் - ஊர்வலமாக?

ஏமாளியான தியாகி சத்தியமூர்த்தி கதி என்ன? கட்சியிலே வஞ்சக அரசியலுக்குப் பலியாகி; ‘அம்போ’ என்று செத்தவர் தானே? ஒரு காமராஜர் தானே நன்றியாளராக நடமாடினார்; அவருக்காகப் போராடியனார்; நயவஞ்சக அரசியலால் அவரும் வீழ்த்தப்பட்டுப் பலியானவர் தானே - சாகும்போது!

தீவிர தேசபக்தியாளர் பாலகங்காதர திலகரைப் பின்பற்றிய திரு.வி.க., வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பாரதியார் ஆகிய இவர்கள்; தங்கள் சொந்த இலக்கிய, தமிழ்த் திறமைகளால் வாழ்ந்தவர்களே தவிர - கட்சியாலல்ல!

கோபால கிருஷ்ண கோகலே மிதவாதிதான்! அவர்தான் அண்ணல் காந்தியடிகள் ஆசான். காந்தியடிகளை நம்பியோர் பின்பற்றினோர் பெருந்தலைவர் காமராசரைப் போல ஓரிருவர்தானே பெரும் புகழோடு வாழ்ந்தவர்கள்? ஆனால், அவர்களைக் கவ்வாது விட்டதா சாகும்போதுகூட அரசியல் சூது வஞ்சகங்கள்?

எனவே, கட்சிப் பத்திரிகை நடத்துவோர் கொள்கைத் தீவிரவாதிகளாகி விடக் கூடாது? ஆனால், அவர்கள் கதி அதோ கதிதான்! அதற்காக மிதவாதியாகவும், இருந்துவிடக்கூடாது. ஓரளவு இரு வாதங்களையும் அடக்கி வாசிக்கும் நடுநிலையாளர்களாக கட்சிப் பத்திரிகைக்காரர்கள் உழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இங்கே ஓர் அனுபவச் சுருக்கத்தை முன்னுரையாகக் கொடுத்துள்ளோம்.

நாவலர்

‘மன்றம்’

சென்னை பூவிருந்தவல்லிக்கு அடுத்து ‘நேமம்’ என்ற கிராமம்தான் நாராயணசாமி எனப்படும் நாவலர் நெடுஞ்செழி-