பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்



சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவின் கதை இலாகா பிரிவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடன் இணைந்து பணியாற்றிய பாவேந்தரின் அன்பராவார்.

ஜலகண்டபுரம் கண்ணன் நடத்திய ‘பகுத்தறிவு’ பத்திரிகை; தீரன் சின்னமலை போன்ற திராவிட மாவீரர்களின் வரலாற்றாய்வை நாடகமாக்கியது. தலைகொடுத்தான் தம்பி என்ற படத்திற்கு வசனம் எழுதிய குழுவில் ப. கண்ணனும் ஒருவராவார்.

ஏ.கே. வேலன்

‘ஞாயிறு’ இதழ்

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற திரைப்படம் தமிழ்நாட்டையே ஒரு வசூல் உலுக்கல் செய்த படமாகும். ஏ.கே. வேலன், சென்னை சாலிகிராமம் பகுதியில் வேலன் ஸ்டியோ என்ற ஒன்றைத் துவக்கி நடத்தி வந்தது அவரது இறுதி வாழ்க்கை ஆகும்.

கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் புலவருக்குப் படித்தவர் ஏ.கே. வேலன். தமிழ்ப் பற்றுணர்ச்சியோடு திராவிடர் இயக்கத்தில் இணைந்தவர். அந்தத் தமிழ் நெஞ்சம் திராவிடரியக்க வளர்ச்சிக்காகப் பத்திரிகை நடத்தியது. பத்திரிகை பெயர் ‘ஞாயிறு’. மாதம் இருமுறை ஏடு. இந்தப் பத்திரிகையை அவர் வறுமையோடு போராடிய வயதில் தஞ்சை நகரிலிருந்து நடத்தியவர்.

சினிமா துறையில் புகழ் பெற்றப் படத் தயாரிப்பாளராகவும், திரைக் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் விளங்கி, தமிழ்ப் புலமை பெற்ற ஒரு ஞாயிறாகத் திகழ்ந்தார்.

என்.எஸ். இளங்கோ

‘எதிரொலி’

அதிராம்பட்டினம் என்.எஸ். இளங்கோ என்றால் தஞ்சை மாவட்டத்தில் தெரியாதார் இரார். சிறந்த தமிழ்ப் புலமையால் அவர் அருமையான தேனினுமினிய ‘பேச்சாளராக, தமிழ்நாடு முழுவதும் சுற்றியவர்! தஞ்சை மாவட்டக் கழகச்