பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

167


செயலாளராகக் கடுமையாக உழைத்த திராவிடக் காளை அவர்! தலை மட்டும் வழுக்கை விழுந்து விட்டது.

அதிராம்பட்டினம் நகரிலிருந்து ‘எதிரொலி’ என்ற ஒரு திங்கள் இதழை நடத்தினார். அதே பத்திரிகையின் பெயரால் எதிரொலி என்ற புகைப்படம் எடுக்கும் ஸ்டுடியோவையும் நிறுவி வருவாய் சம்பாதித்தார்.

ஒருமுறை அறிஞர் அண்ணா அவர்கள் தஞ்சை மாவட்டச் சுற்றுப்பயணம் செய்தபோது, அதிராம்பட்டினம் கூட்டத்தில் கலந்து கொள்ள இளங்கோ வீட்டில் மதியம் உணவுண்டார். உணவு முடிந்த பின்பு, அண்ணா அவர்களுக்கு இளங்கோ வெற்றிலை மடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார் - தாம்பூலம் தரிக்க.

அப்போது இளங்கோ அண்ணாவிடம் சிரித்துக் கொண்டே, ‘அண்ணா தலையில் வழுக்கை விழுந்தவர்கள் எல்லாம் அறிவாளிகளாக இருப்பார்களாமே’ என்றார். அதற்கு எடுத்துக்காட்டாக லெனின், காந்தியடிகள், நேரு போன்றவர்கள் தலையைச் சுட்டிக் காட்டினாராம்.

உடனே அண்ணா அவர்கள், அந்த வழுக்கை இரகசியத்தை எந்த அறிவாளியும் வெளியே சொல்ல மாட்டான்’ என்றார். உடனிருந்தோர் இளங்கோவைப் பார்த்து சிரித்து விட்டார்களாம். அண்ணாவுடன் அவ்வளவு நெருக்கமாகப் பழகும் தன்மானச் சிங்கம் அதிராம்பட்டினம் என்.எஸ். இளங்கோ. அவரைப் போலவே அவருடைய ‘எதிரொலி’ பத்திரிகையும் தன்மான வளர்ச்சிக் கருத்துக்காகப் பாடுபட்டது.

அதிராம்பட்டினம் இளங்கோ நடத்திய அதே ‘எதிரொலி’ என்ற பெயரில்தான்; அமைச்சர் ஆற்காடு வீராசாமி நாளேடு பத்திரிகையை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆற்காடு வீராசாமி

‘எதிரொலி’

வடார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்க்காடு என்ற நகரினருகே பிறந்த ஆற்காடு வீராசாமி, தமிழ்நாட்டின்