பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

169


பூஞ்சோலை வண்டுகளைப் போல சுரதா அவர்களது கருத்துத் தேனைப் பருகிப் பறந்து ரீங்காரமிட்டார்கள்.

அந்தக் கவிஞர்கள் ஒன்று சேர்ந்து பாரதிதாசன் கவிதா மண்டலத்தை உருவாக்கித் தொண்டு புரியும் கவிதை வட்டமாகத் திகழ்ந்தார்கள். அந்தப் பெருமையை சுரதா, தனது ஆசானுக்கு உருவாக்கினார். சுரதா கவிதை வட்ட இளம் கவிஞர்கள் தலைமுறையினரை, பாவேந்தர் பாரதிதாசன் கவிதா மண்டலமாகத் திகழ வைத்துக் கொண்டிருக்கும் புகழ்ப் பூங்காவை, உருவாக்கியவராக சுரதா உலா வந்து கொண்டிருப்பதை தமிழ்நாடு மறவாது.

புலவர் பொன்னிவளவன்

‘அருவி’ பத்திரிகை!

திராவிடரியக்கத் தமிழ்ப் புலமைத் தும்பிகளுள் புரட்சி நடையூறும் தேன் தமிழ்க் கவிதைகளை அழகாக, ஆழமாக, அலங்காரமாகப் பாடிய மரபுக் கவிஞனாக, சுரதா கவிதை பாணியைப் பின்பற்றிக் கவிதைகளை எழுதி வந்தவர் புலவர் பொன்னி வளவன். அவர் ‘அருவி’ என்ற கவிதைப் பத்திரிகையை திராவிடரியக்கத்துக்குத் தமிழ்த் தொண்டாக மட்டுமல்லாமல், இயக்கக் கவிஞர்களுக்குத் தலைமைக் கவிஞனாக, எழுச்சியூட்டும் உணர்ச்சிக் கவிஞனாக வாழ்ந்து மறைந்தவர். கழக வளர்ச்சிக்கு கவிஞர் என்ற ரோஜா செடியாக இளமைப் பருவம் முதல் வாழ்ந்த கொள்கைக் கவிஞர் பொன்னி வளவன் என்ற நவநீதக் கிருஷ்ணன்.

காங்கிரஸ் ஆட்சியில் அறிஞர் அண்ணாவின் ஆணையை ஏற்று, திருநெல்வேலி நகரில் சட்ட எரிப்புப் போர் என்ற போராட்ட்த்தில் ஈடுபட்டுக் கைதாகிச் சிறை சென்ற சிங்கக் கவிஞர் அவர்.

தனது சட்ட எரிப்புப் போரின் வாக்கு மூலத்தை நீதிமன்றத்தில் கவிதையிலே எழுதிப் படித்த திராவிடரியக்கப் போராட்ட வரலாற்றின் முதல் புரட்சிக் கவிஞர் புலவர் பொன்னி வளவன்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் கூட, எந்தக் கவிஞனும், நீதிமன்ற வாக்குமூலத்தைக் கவிதையில் பாடினார்