பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

171



அரங்கண்ணல்

‘அறப்போர்’

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இராம. அரங்கண்ணல், அறிஞர் அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் நடத்தி வந்த, ‘திராவிட நாடு’ என்ற வாரப் பத்திரிகையில் பல ஆண்டுகளாகத் துணையாசிரியராக இருந்தவர். அருமையான எழுத்தாளர். வரலாற்று ஆய்வு அறிவுடையவர். தமிழ் இலக்கியத்தில் நன்கு பயிற்சியுடையவர். எழுத்துத் துறையில் சுவையாக எழுதும் திறனுடைய அவர், சென்னை மாநகரிலே இருந்து, ‘அறப்போர்’ என்ற பத்திரிகையை நடத்தினார்.

இராம. அரங்கண்ணல் மயிலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராகவும் இருந்தார். பிற்காலத்தில் சிறந்த திரைப்படத் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். அவர் எழுதிய கதை ‘பொன்விளையும் பூமி’ அவரே அதற்கு வசனம் எழுதினார். அறிஞர் அண்ணாவின் ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ எனும் திரைக்கதைக்கு வசனம் எழுதியவர் அரங்கண்ணல்.

தில்லை வில்லாளன்

‘தம்பி’ பத்திரிகை

அறிஞர் அண்ணாவை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்த ‘திராவிட நாடு’ வாரப் பத்திரிகையில், தில்லை நகர் எனப்படும் சிதம்பரம் நகரைச் சேர்ந்த வில்லாளன் துணையாசிரியராகப் பணியாற்றியச் சிறந்த எழுத்தாளர். அருச்சுனன் எனப்படும் அவரைத் தில்லை வில்லாளன் என்றே அழைப்பது வழக்கம்.

நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினராகவும், தில்லை வில்லாளன் பணியாற்றினார். அவர் ‘தம்பி’ என்ற பெயரில் இலக்கியப் பத்திரிகை நடத்திப் புகழ் பெற்றார்.

‘கழகக் குரல்’

திருவை. அண்ணாமலை

நெல்லை மாவட்டம் திருவைகுண்டம் நகரைச் சேர்ந்தவர் திருவை. அண்ணாமலை. சிறந்த கழக மேடைப் பாடகர். தென் மாவட்டக் கழகக் கொள்கைப் பிரச்சாரத்திற்கு நன்கு