பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

173


துணை ஆசிரியராகப் பணியாற்றியவர் மா. செங்குட்டுவன். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திராவிடரியக்கக் கொள்கை வீரர். சிறந்த சொற்பொழிவாளர். சுவையூறும் கட்டுரைகளை எழுதுவதில் வல்லவர்; கவிதை எழுதும் திறன் பெற்றவர். பாவேந்தர் பாரதிதாசன் கவிதை வட்டத்தின் வளர்ச்சிக்கும், பாவேந்தரை நினைவுபடுத்தும் பிறந்த நாள் விழாவிற்கும் சிறப்பான தொண்டாற்றிடும் தமிழ்ப் பித்தர்.

‘கவிக்கொண்டல்’ என்ற பத்திரிகை; கொள்கை மேகமாக தமிழ்நாட்டில் வலம் வந்து, திராவிடரியக்க வயல்வெளியில் கதிர்மணிகள் வளம் கொழித்து வளர்வதற்கு ஏற்ற; செல்வ விண்நீராகப் பொழிந்து கொண்டிருப்பவர் மா. செங்குட்டுவன்.

அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர், கலைஞர் போன்ற தலைவர்களிடம் அதிக ஈடுபாடு கொண்ட கொள்கைப் பாசம் நிறைந்தவர். ஏறக்குறைய 50 ஆண்டு காலம் தமிழக அரசியலின் நெளிவு சுளிவுகளையும், திராவிடரியக்க வரலாற்றின் முழு சம்பவங்களையும் நன்கு உணர்ந்த நினைவாளர் செங்குட்டுவன். அவர் நடத்தி வரும் ‘கவிக்கொண்டல்’ என்ற திங்கள் இதழ் அவரது நினைவுக் கோட்டத்தின் நிலையமாக ஏறக்குறைய 20 ஆண்டுகளாகத் திகழ்ந்து வருவதாக எனது நினைவு.

‘சங்கொலி’

திருநாவுக்கரசு

திராவிடர் இயக்கக் கலைக் களஞ்சியமாக நடமாடுபவர் க. திருநாவுக்கரசு. அவர் ‘சங்கொலி’ என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும், மறுமலர்ச்சி திமுகவின் அதிகாரபூர்வ ஏடாக, ‘சங்கொலி’யைத் திறம்பட நடத்தி வருகிற பெருமைக்குரியவர். இளம் வயது முதலே அவர், திராவிடரியக்கக் கொள்கைப் பிணைப்பாள்ராக இருப்பது மட்டுமன்று, இந்த இயக்கத்தின் வேர்கள் யார் விழுதுகள் யாரென்று அவர்களது வரலாற்றுக் குறப்புக்களை, இன்றும் “சங்கொலி” வாரப் பத்திரிகை வாயிலாக அடையாளம் காட்டி வருவது, வருங்கால இளைய தலைமுறையினர்களுக்கு ஒரு வழிகாட்டிக் குறிப்பேடாகவும் விளங்குகிறது.