பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

181


தொண்டு புரிந்து வருகிறார். ஏறக்குறைய ஓர் ஐம்பதாண்டுக் காலமாகத் திராவிடரியக்கத் தொண்டுகளாற்றி வரும் ஒரு கலைஞராக நடமாடி, அரசியலில், கலையியலில் எவரிடமும் எதையும் எதிர்பாரா சத்தியச் சாட்சியாக வாழ்ந்து வருகிறார்!

‘மகரந்தம்’

மணிமொழி

முரசொலி நாளேட்டில் ஏறக்குறைய 15 ஆண்டு காலமாக துணை ஆசிரியராகப் பணியாற்றிவர் கவிஞர் மணிமொழி. திராவிடர் இயக்கத்துள், குறிப்பாக பாவேந்தர் பாரதிதாசன் கவிதா மண்டலத்தில் ஒருவராக வாழ்ந்தவர்.

நாஞ்சில் மணிமாறனும், கவிஞர் மணிமொழியும் இரட்டைப் புலவர்களைப் போல இணைந்து, திராவிடர் இயக்க வளர்ச்சிக்குப் பத்திரிகைத் தொண்டு புரிந்தவர்களாவர்! ஆற்காட்டு சகோதரர்களான சர்.ஏ. இராமசாமி, சர்.ஏ. இலட்சுமணசாமியைப் போல, இயக்கக் கொள்கைகளைப் பட்டித் தொட்டியெலாம் பாங்குடன் வளர, ஆடல் - பாடல், இசை - நாடகம் மூலமாகத் தொண்டு புரிந்து வந்த கலைச் சித்தர்கள் இந்த இருவர் என்பதைக் கலையன்பர்கள் அறிவர்.

கவிஞர் மணிமொழி, நாஞ்சில் மணிமாறன் இருவரும் இணைந்து ‘மகரந்தம்’ என்ற இலக்கியத் திங்கள் இதழை நடத்தினார்கள். கவிஞர் மணிமொழி காலமான பிறகும் திரு. மணிமாறன் அவர்கள் தனித் திறமையுடன் கலைத் தொண்டாற்றி வருகிறார். வாழ்க நாஞ்சில் மணிமாறன் தமிழ்த் தொண்டு!

‘தினகரன்’

கந்தசாமி

‘தினகரன்’ என்ற நாளேட்டின் ஆசிரியராக, நிறுவனராக இருந்த கந்தசாமி அவர்கள், பத்திரிகைப் பணியால் திராவிடர் இயக்கத்துக்கு வந்து தொண்டாற்றி, கலைஞர் அவையில் மந்திரியாகவும் இருந்தார். இவரது உறவினரான சி.பா. ஆதித்தனார், அறிஞர் அண்ணா அமைச்சரவையில் சட்டப் பேரவைத் தலைவராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.