பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்




சர்.ஏ. இராமசாமி

Justice Daily

நீதிக் கட்சியில் தோன்றிய சில பலவீன சூழல்களால் நிறுத்தப்பட்ட டி.எம். நாயர், இராமன் பிள்ளை ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்ட ஜஸ்டிஸ் பத்திரிகை மீண்டும் 17.1.1927-ஆம் ஆண்டு சர்.ஏ. இராமசாமி முதலியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்தது. அந்த நாளேட்டின் முதல் இதழில் ‘நாம்’ (ourselves) என்ற தலையங்கத்தை சர்.ஏ. இராமசாமி முதலியார் எழுதி, ஜஸ்டிஸ் கட்சியின் பலவீனச் சூழல்களை விளக்கினார்.

ஜஸ்டிஸ் நாளேடு, காங்கிரஸ் கட்சி கூறுவதைப் போல, வேற்று மண்ணுக்குரிய ஒவ்வாத செடி அல்ல (Exotic Plant) இந்த நாளேடு; ஒவ்வாத சூழ்நிலையால் வாடி வதங்காது என்று குறிப்பிட்டார் சர்.ஏ.ஆர். ஏறக்குறைய எட்டு ஆண்டுகள், 1935-ம் ஆண்டுவரைப் பத்திரிகைப் பணியை ஆற்றி விட்டு; அதை நடத்தும் பொறுப்பை டி.ஏ.வி. நாதன் என்பவரிடம் ‘சக்தி வாய்ந்த பத்திரிகை ஜஸ்டிஸ்’ என்று கூறி 1935-ஆம் ஆண்டில் விட்டுவிட்டு சென்றார்.

பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அமைத்தப் போர்க் கால அமைச்சரவையில் (War Cabinet) ஒரு தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர் முதன் முதல் இந்தியாவின் பிரதிநிதியாக இடம் பெற்ற புகழ் சர்.ஏ. இராமசாமி முதலியார் என்ற பத்திரிகையாளரையே சாரும.

சர்.ஏ. இராமசாமி அவர்கள் ஜஸ்டிஸ் பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவத்தைக் கண்ட பிரிட்டிஷ் அரசு, 1948-ஆம் ஆண்டில், மார்ச் 29 அன்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாட்டுச் செய்தி சுதந்திர மாநாட்டில் U.N. Conference on Freedom of Information என்ற இந்தியத் தூதுக் குழுவின் தலைவராய் சர்.ஏ.ஆர். முதலியார் பங்கேற்றார்.

அந்த மாநாட்டில் சர்.ஏ.ஆர். உலக வல்லரசுகள் வியக்கும் வண்ணம் பேசினார். செய்தித் தாள்கள் சில நன்னெறி முறைகளை (Code of Ethics) வகுத்துக் கொண்டு செயல்பட