பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

17


பொருளாதாரப் பெருக்க வழிகளை, காலத்திற்கும், கருத்திற்கும், உணர்ச்சிகளுக்கும், எழுச்சிகளுக்கும், முயற்சிகளுக்கும், புரட்சிகளுக்கும் ஏற்றவாறு இன்பச் சுவைகளையும், துன்பச் சுவைகளையும் ஏற்றி அறிவுறுத்தும் வாழ்க்கைக் கலையே பத்திரிகையின் செயல்முறைகளாகும்.

இலக்கியம் ஒன்றை உணர மக்களது இதய உனாவுகளான குணங்களை, சுபாவ-பாவங்களைப படிப்பவன் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் போல, பத்திரிகைப் படிப்போருக்கும், அதை நடத்துவோருக்கும் அவற்றுக்குரிய பயிற்சித் தடங்களை, சுவடுகளை அறிந்திருக்க வேண்டிய அவசியமும் தேவை.

இத்தகையப் பத்திரிகைகளைப் படிக்கும் மக்கள், அவரவர் எண்ணங்கள், தேவைகள், விருப்பங்கள், அன்றாட இதழ்களிலே வெளிவந்துள்ளனவா என்று பார்த்து, ஏக்க உணர்வுகளோடு ஊஞ்சலாடிக் கொண்டிருப்பார்கள்.

பத்திரிகைகளிலே வரும் துன்பச் சம்பவங்களைக் கண்டால் துவள்வர்; இன்ப நிகழ்ச்சிகளைப் பார்த்தால் மகிழ்வில் உழல்வர்; வெறுப்பூட்டும் உணர்வுகளை அறிந்தால் வெதும்புவர்; கட்சிக் கருத்துகள் வெளியானால் களிகொள்வர்; இந்தப் பண்புகளைப் பத்திரிகைகள் தினந்தோறும் மக்கள் இடையே உருவாக்கிக் கொண்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது.

மக்களது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து வரும் காதல், திருமணம், கூத்து, குறை கூறல், நிறை பாராட்டல், போர்த் தொடுத்தல், மக்கள் விபத்துக்களால் மாளல், சீமான்களது ஆடல் பாடல், பணக்காரர்களது படாடோபப்பகட்டுகள்; விவசாயம் புரிவோர் குறை நிறை சம்பவங்கள், தண்ணீர்க் குடங்களை ஏந்தி அலையும் தளிர்மேனியர், பள்ளி மாணவ மாணவியர்களது பாட்டு, ஆட்டங்கள், கிராம மக்கள் இடையே நடைபெறும் தெம்மாங்கு, பறையறை சம்பவங்கள்; கல்விமான்களது உரையாடல், கவியரங்கம், பட்டிமன்றம்; திருவிழாச் சம்பவங்கள், ஆன்மீக நிகழ்ச்சிகள், வானொலி-தொலைக் காட்சிச் செய்திகள்; வம்படி வழக்குகள், நீதிமன்றம், காவல் துறையினர், ஊராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி கடமைகள், மருத்துவ மனைத் துன்பங்கள், இன்பங்கள்,