பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்



டாக்டர் ஏ.ஆர்.முதலியார்

பேச்சின் எதிரொலி!

ஜெனிவா மாநாட்டில் பத்திரிகையாளர் உரிமைகளை, நலன்களைப் பற்றி விரிவாக உரையாற்றியக் கொள்கையை மாநாடு ஏற்றுக் கொண்டது. மாநாட்டில் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் உருவெடுத்தன. என்றாலும், பத்திரிகையாளர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே பொதுவான ஒழுக்க நடத்தைகளை, மரபினை (Standard of Conduct) சிறப்பான முறையில் ஜெனிவா மாநாடு வரையறுத்துச் செய்தது.

மாநாட்டிற்கு முன்பு சர்.ஏ.இராமசாமி முதலியார், இலண்டனில் தங்கியிருந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் சிலர், ஆர்க்காட்டாரைச் சந்தித்தார்கள். அவர்களில் ஒரு பத்திரிகையாளர் நமது இராமசாமி முதலியாரிடம், ‘இந்தியத் தூதுக் குழுவின் தலைவராகப் பத்திரிகையாளர் சந்திக்கின்ற ஜெனிவா மாநாட்டில் கலந்துகொள்ள உமக்கு என்ன தகுதி இருக்கிறது’? என்று கேட்டு விட்டார்! காரணம், அந்த இலண்டன் நிருபருக்கு டாக்டர் சர். ஏ. இராமசாமி முதலியார் யார்? எப்படிப்பட்டவர்? தூதுக் குழுவின் தலைவராவதற்கு முன்பு அவர் என்ன பணி செய்தவர்? என்பதை எல்லாம் அந்த நிருபர் அறியாததால் அப்படிக் கேட்டு விட்டார்.

“இந்தக் கேள்வியை நீங்கள் எங்களுடைய அரசைக் கேட்டிருக்க வேண்டும்’ என்று கூறிய டாக்டர் இராமசாமி முதலியார், பிறகு ஜஸ்டிஸ் ஆங்கில நாளேட்டில் தான் எட்டு ஆண்டுகள் பதிப்பாசிரியராகப் பணியாற்றியதையும் குறிப்பிட்டார்.

அடுத்து ஒரு நிருபர், ‘ஜெனிவா மாநாடு எப்படிப்பட்ட முடிவை எடுக்க இருக்கிறது?’ என்ற வினாவை விடுத்தார்.

அதற்கு, டாக்டர் ஏ.ஆர். முதலியார் பதில் கூறும்போது, ‘பத்திரிகையாளர் சுதந்தரமாக இருக்க வேண்டுமானால், சில கட்டுப்பாடுகளை ஏற்றுத்தான் ஆக வேண்டும். (To be free you must accept chains) என்று அறிவுரை கூறிய அவர், செய்தித் தாள்கள் மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகளை டாக்டர் இராமசாமி முதலியார் வரவேற்றார். ஆனால், அவற்றின்