பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8
தற்கால - கட்சி சார்பற்ற
தமிழ்ப்பத்திரிகைகள்

ந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பத்திரிகைகள் நடத்த விரும்புவோர், அவரவர் எண்ணங்களுக்கு ஏற்றவாறு ‘நடுநிலை’ இதழ்கள் என்ற பெயரிலே தினசரி, வாரம், திங்கள், மும்மாத இதழ்கள், ஆண்டு மலர்கள், வாரம் இருமுறை ஏடுகள், மாதம் இருமுறை இதழ்கள் என்று ஏராளமான பத்திரிகைகள் வெளிவருவதும், பொருளாதார நெருக்கடிகளால் அவை நின்றுபோவதுமாக இருக்கின்றன.

புது தில்லியிலே உள்ள பத்திரிகைத் தாட்கள் வழங்கும் அலுவலகத்திலே பணியாற்றும் நாராயணசாமி நாயர் என்ற அதிகாரியிடம் நான் ஒரு முறை தாள் கோட்டா பற்றி உரையாடி விவரம் அறிந்தபோது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 356 பத்திரிகைகள் வெளிவருவதாகக் கூறினார். அந்த விவரம் ஒரு வணிக நோக்கு என்பதால் அவ்வளவு பத்திரிகைகள் வெளிவருவதாக அவரது புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

நாளேடு

வகைகள் :

மதுரை மாநகரிலே இருந்து வெளிவந்த ‘தமிழ் நாடு’ என்ற பத்திரிகையைக் கருமுத்துதியாகராச செட்டியார் உண்மையான