பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

தற்கால - கட்சி சார்பற்ற தமிழ்ப் பத்திரிகைகள்


தமிழ் வளர்ச்சிப் பற்று நோக்கோடு நடத்தினார். நல்ல நோக்கத்திற்குத் தான் சமுதாயத்தில் வரவேற்பு அதிகமிருக்காதே! அதனால், அந்த தமிழ்நாடு இதழ் நின்றுபோய், பிறகு வார இதழாக வெளிவந்து, இறுதியில் அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது.

பண நெருக்கடியா செட்டியாருக்கு என்றால், அவர் ஒரு பெரும் தொழிலதிபர் ஆவார்! தமிழர்களிடையே தமிழ்ப் பற்றுக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது என்பதை அவர் முழுமையாக உணர்ந்த பிறகு அந்த நாளேட்டையும், வார இதழையும் நிறுத்திவிட்டார் - பாவம்!

கோவை நகர்

‘நவ இந்தியா’

கோவை மாநகரில் இருந்து ‘நவ இந்தியா’ என்ற ஒரு நாளேட்டை இராமகிருஷ்ணன் என்பவர் நடத்தினார். பிறகு தலைநகரமான சென்னை மாநகருக்கு அந்தப் பத்திரிகையை இடம் மாற்றிப் பார்த்தார்! என்ன செய்வது? பெரும் செல்வச் சீமானான அவரும் அதை நிறுத்திவிட்டார்! தமிழ் மக்கள் இடையே நல்ல வரவேற்பு இருந்தால் மட்டும் போதுமா? பத்திரிகைகள் பரவலாக விற்பனையாக வேண்டுமே!

‘நவ சக்தி’

தனுஷ்கோடி

தமிழ்த் தென்றல் என்று தமிழ் மக்களால் மதித்துப் போற்றப்படும் திரு.வி.க. அவர்கள் ‘நவசக்தி’ என்ற வார இதழைத் துவக்கினார். வெற்றிகரமாகத்தான் நடத்தினார்!

அவருக்குப் பிறகு முருக-தனுஷ்கோடி என்ற தேசியவாதியால் பெருந்தலைவர் காமராசர் ஆதரவோடு காங்கிரஸ் கட்சிக் கொள்கைகளைச் சுமந்த நாளேடாக வெளிவந்து கட்சித் தொண்டு செய்தது. அதற்குப் பிறகு அதுவும் நின்றுவிட்டது.