பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

தற்கால - கட்சி சார்பற்ற தமிழ்ப் பத்திரிகைகள்


200 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ள பல்சுவை இலக்கியச் சிந்தனையாளர்.

அகில இந்திய தேசியக் காங்கிரஸ் இயக்கம் நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று தியாகம் புரிந்தவர். தமிழ்ப் பற்றுடையவர். சிறந்த எழுத்தாளர். நாடு சுதந்திரம் பெற்ற பின்பு, காங்கிரஸ் இயக்கத்தை விட்டு வெளியேற்றப்பட்ட ம.பொ.சி. தமிழரசுக் கழகம் என்ற ஒரு கட்சியைத் துவக்கிச் சிறப்பாகவே நடத்தினார்.

தனது கட்சி வளர்ச்சிக்காக ‘செங்கோல்’, ‘தமிழ் முரசு’ என்ற இரண்டு வாரப் பத்திரிகைகளை ஒன்றன் பின் ஒன்றாக நடத்தி வந்தார். இரண்டுக்கும் அவரே ஆசிரியர்.

சுதந்திரம் பெற்ற பிறகு வட எல்லை போராட்டத்தை அவருடைய தமிழரசுக் கழகம் சார்பாக நடத்திச் சிறை சென்றார். திருத்தணி நகரமும், அதைச் சுற்றியுள்ள சில தமிழ் மக்கள் அதிகமாக வாழும் கிராமங்களும், ம.பொ.சி. நடத்திய போராட்டத்தால் தமிழ் நாட்டுக்குக் கிடைத்தவையே. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட போது, படாஸ்கர் குழு ம.பொ.சி. போராட்டத்தைக் கவனத்தில் கொண்டு மத்திய அரசு பரிந்துரைத்ததை பெற்றுக் கொண்டு அதற்கு அனுமதியும் அளித்தது. அதனால், திருத்தணி தமிழ்நாட்டின் வட எல்லையானது. திருப்பதி ஆந்திரருக்கு போனது.

ம.பொ.சி.யின் முயற்சியால், வீர பாண்டியக் கட்டபொம்மன் விடுதலைப் போர் வீரனானான். அவன் கதை திரைப் படமானதற்கும் ம.பொ.சி.தான் முதல் காரணம். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. தியாக வரலாற்றைத் திரைப்படமாக்கிட ம.பொ.சி.யின் தமிழ்ப் பற்றே காரணமாகும். இரண்டு திரைப் படங்களிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனே கட்டபொம்மனாகவும், வ.உ.சி.யாகவும் நடித்தார்.

தமிழரசுக் கழகம் கலைக்கப்பட்ட பிறகு ம.பொ.சி., தி.மு.கழகத் தேர்தல் சின்னமான உதய சூரியன் சின்னத்தில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒரு பத்திரிகையாளர் சென்னை சட்டமன்ற