பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

201


மேலவைத் தலைவராக பதவி பெற்றார் என்றால், அது பத்திரிகைத் துறைக்கும் பெருமை அல்லவா?

பத்திரிகையாளர் சங்கம்

நடத்தும் - “தமிழ்த் தென்றல்”!

“எந் நாட்டும் இல்லாத இந் நாட்டுத் தென்றலே! வாழ்க”! என்றார் பாவேந்தர் பாரதிதாசன்!

‘தென்றல்’ என்றால் சிலருக்கு கவிஞர் கண்ணதாசன் நடத்திய பத்திரிகை பெயர் தான் நினைவிலே ஊஞ்சலாடும்!

தமிழ்த் தென்றல் என்றால், திரு.வி.க.விற்கு தமிழ் அன்பர்கள், பண்பர்கள் கொடுத்த விருது ஆயிற்றே என்ற ஊற்று நீரிலே தமிழர் நீராடுவர்.

ஆனால், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் நடத்தும் ‘தமிழ்த் தென்றல்’ திங்கள் இதழை இங்கே நாம் குறிப்பிடுகிறோம். திங்கள் இதழ்தான் என்றாலும், அதன் கருத்துக்கள் திங்கள் ஒளியைப் பொழிவதை நாம் அனுபவிக்கின்றோம். சங்க மாநிலத் தலைவர் திரு. டி.எஸ்.இரவீந்திர தாஸ், இதழின் ஆசிரியர். தமிழ்ப் புலமை பெற்ற சட்டாவதானி. அவரது எழுத்து, கலந்துரையாடல், சிந்தனை, உழைப்பு எல்லாமே வெள்ளுவா ஒளியே!

உழைக்கும் பத்திரிகையாளர் வாழ்க்கைக்கு தென்றல் தரும் இன்பம் போன்ற இதமான வசதிகளைச் செய்து கொடுக்க சங்கத் தலைவர் விரும்பி உழைக்கின்றார்! ஆனால், வீசும் காற்றின் மேற்பட்ட பஞ்சு போல, மஞ்சு போல அவற்றைப் பறக்கடித்து-கரைத்து விடுகின்றது. ஜனநாயக ஆட்சி! மக்களாட்சியின் நான்காவது துண் அல்லவா பத்திரிக்கையாளர்கள் சங்கம்? அதற்கு ஜனநாயக அரசு ஆற்றும் நன்றி இதுதானோ!

எதிர் காலத்தில் பத்திரிகையாளர்களுக்குரிய வசதிகளை எந்த அரசாவது ஆற்றாமமலா போகும்? என்ற மன அமைதியோடு ‘தமிழ்த் தென்றல்’ பத்திரிகைப் பணிகள் மூலம் போராடி வருகிறார். டி.எஸ். இரவீந்திரதாஸ். பத்திரிகையாளர்