பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

தற்கால - கட்சி சார்பற்ற தமிழ்ப் பத்திரிகைகள்


பொறுக்காத சிவபெருமான் நெற்றிக் கண்ணைக் காட்ட, ‘நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே’ என்று அக்கவிதைக் குற்றத்தை நிலைநாட்டிடப் போராடிய அருளாளர் ‘நக்கீரர்’!

அந்த நக்கீரர் பெருமான் பெயரோடு நடமாடும் பத்திரிகையை நடத்துபவர் கோபால் என்ற பத்திரிகையாளர். அவர் நடத்தும் investigation இதழ் “நக்கீரன்”.

ஒருவனுடைய குற்றங்களைச் சோதனை செய்கின்ற, அலசி ஆராய்கின்ற அந்த ஏடு, கர்நாடகம், தமிழகம் என்ற இரண்டு அரசுகளின் இனிமையான தயவுக்காக ‘நக்கீரன்’ தூது சென்று, இறுதியில் invidious எனப்படும் ‘போட்டிப் பொறாமைகளைத் தூண்டக் கூடிய ‘பத்திரிகை என்ற தரத்தைப் பெற்றான் ‘நக்கீரன்!’.

‘நக்கீரன்’ சென்ற தூது வேலையை ஊக்கமூட்டக் கூடிய invigorates பத்திரிகைப் பணி என்று எண்ணாமல், இரண்டு அரசுகளின் ஒழுங்கு, உறவுகளைத் தலைகீழாகத் திருப்பும் பணிinversion என்று கருதி, நக்கீரன் தலையிலே பொடா சட்டச் சுமையை ஏற்றி வைத்தது வஞ்சக, பழி வாங்கும் பண்புடைய தமிழக அரசு.

சிவபெருமானுடைய நெற்றிக் கண் தீப்பொறிகளுக்குப் பலியாகித் தீராக் குட்ட நோய் பெற்ற நக்கீரனாரைப் போல, ‘நக்கீரன்’ கோபால்; பொடா என்ற ஆணவக் குண வஞ்சகத்துக்கு ஆட்பட்டு சிறைபட்டதால், ‘40’ என்ற நாடாளுமன்ற மக்கட் சக்தியின் வெற்றியெனும் கருணையால், நக்கீரன் சிறைக் கபாடத் தாள் தூள் தூளாக்கப்பட்டு வெளியே வந்தார். இது, இன்வஸ்டிகேஷன் என்ற பத்திரிகைக்கு அந்த ஏடு தேடிக் கொண்ட ‘மரியாதை’!

புலனாய்வுப் பத்திரிகை என்றால், குற்றம் சாட்டப்பட்டவனுடைய குற்றங்களை மட்டும் எடுத்துக் காட்டும் ஒரு முனைப் போக்குதான் என்பதாக மட்டும் அமையக் கூடாது. குற்றம் சாட்டுபவன் மட்டும் நியாயவானா? யோக்யமானவனா? சமுதாயத்தில் நாணயமுடையவனா!