பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

205


என்பதையும் மக்களுக்கு எடுத்து விளக்கும் இதழாக இருக்க வேண்டாமா? குற்றம் சாட்டுபவன் என்ன புராண அரிச்சந்திரன் பேரனா? அவனுக்கும், அவனைப் போலவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறும் காரண - காரியங்களுக்காகவும் வாதாடுகின்ற பத்திரிகைகள் துவக்கப்பட வேண்டுமோ!

‘இன்வெஸ்டிகேட்’ பத்திரிகைகள் செய்யும் துப்புத் துலக்கல் பணிகள் invisible ஆக, எந்த வஞ்சகச் சக்திகளாலும் வெல்ல முடியாததாக இருக்க வேண்டும்! அதுதான் investigate என்பதன் இலக்கணம்!

ஒரு செய்தியை நீதிமன்றம் பயத்துக்காக அஞ்சி, தெரிகிறது, புரிகிறது; நம்பப்படுகிறது; கூறப்படுகிறது என்று உண்மையை மூடி மறைத்தால், செய்த அந்த புலன் விசாரணை மதில்மேல் பூனையாக மாறாதா?

எனவே, புலன் விசாரணைப் பத்திரிகையின் விசாரணை முடிவுகள், குற்றம் சாட்டப்பட்ட, குற்றம் செய்த இருமுனை வாதிகளுக்கும் ஓர் எச்சரிக்கை அறிவிப்பாக Alert ஆக அமைய வேண்டும். அப்போதுதான் அடுத்து ஒருவன் குற்றம் செய்யாமல் பய பக்தியோடும் AWE, அதிர்ச்சியோடும் சமுதாயத்தில் நடமாடுவான். மக்களிடையே ஒரு விழிப்புள்ள நிலை Awareness உருவாகும்.

தற்போது இன்வெஸ்டிகேஷன் என்ற பெயரால் பல பத்திரிகைகள் புற்றீசல் போல பறந்து பறந்து பொத்து பொத்தென்று பணம் எனும் புதர் மேலேயே இறக்கைகள் சிதறி வீழ்ந்து அழிகின்றன! இது புலனாய்வுப் பத்திரிகைத் துறைக்கே அவக்கேடு ஆகும்!

‘விகடகவி’

பல்சுவை இதழ்

“வரலாற்றுப் புகழும், வரலாற்று இழுக்கும், இவ்விரண்டும் உணர்ச்சி வசப்பட்டுச் செய்யும் பெரிய நன்மையாலும், கவனமின்மையால் செய்யும் சிறிய தவறினாலும் நிகழ்ந்துவிடும்” என்று விகடகவி என்ற பல்சுவை மாத இதழ், வாசகர்களுக்கு மட்டுமல்ல; பத்திரிகையாளர்-