பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

207


சுற்றுலா வட்ட ஒலியை எழுப்பி வருகிறது. தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிப் புலமையாளரான கவிஞர் முருகுவண்ணன் இதன் ஆசிரியர்.

கவிஞர், தனது 80 ஆண்டுக் காலம் முத்தமிழ்த் தொண்டில் ஏறக்குறைய 60 ஆண்டுகளாக இலக்கிய வானியலில் விந்தைகள் பல விளைவித்தக் கூர்த்த மதியினர்; இருமொழி ஊற்றுக் கண்களாகச் சுரப்பவர்; அந்தச் சுரப்பு நீர் விண் நீராகவும்; தண்ணீராகவும், உண்ணீராகவும், வெந்நீராகவும், அமுதம் போன்ற உமிழ் நீராகவும், பன்னீராகவும், சில நேரங்களில் கண்ணீராகவும் இலக்கிய வேட்கைகளில் சுவையூட்டியதுண்டு.

தமிழின் தனிமையை இனிமையோடு நிலைநிறுத்தும் கவிஞர் மட்டுமல்லர்; விண்ணியல், மண்ணியல் ஆய்வுகளை ‘அருட்பா’ சிந்தனையில் நடத்தி அரிய கவிதைகளை வரைந்தவர். திருக்குறட் கடலைக் கடைந்து அமிழ்தம் எடுத்து, என் போன்ற பசிஞர்களுக்கு ஊட்டுபவர்; ‘கழக முரசு’ அறிஞருலகத்திற்கு மென்னோசை எழுப்பி, இன்னோசை வழங்கி, பண்ணோசையால் மண்மாந்தரை மகிழவைத்து, கவிஞர் தனது எண்பதாவது வாழ்க்கைக் கல்லில் காலடி பதிய வைத்து, தமிழ்ப் பணியாற்றி வரும் பூ மனத் தும்பியாக இலக்கிய தேன் கூடு கட்டி வருபவர்!

‘அல்லயன்ஸ்’

“விவேக போதினி”

திருமயிலை கபாலீச்சுரம் திருக்குளம் எதிரே இலக்கிய முத்துக்களை ஆழ்ந்து; ஆய்ந்து வழங்கி நூறாண்டு காலமாக ‘அல்லயன்ஸ்’ என்ற பெயரில் பதிப்பகமாகக் காட்சி வழங்கி வருகின்றது.

அந்த அறிவுப் பூங்காவை நிறுவிய வித்தகர் திரு. குப்புசாமி ஐயர், பல்வேறு இலக்கிய நூற் எழிற் பூவினங்களின் இதழ் மணங்களை நுகர்ந்தவர். தேசப் பிதா அண்ணல் காந்தியடிகள், தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர்,