பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

213



2. ஆங்கில ஆட்சியின் செயலாளருக்கு, பத்திரிகை நடத்தும் உரிமையாளரின் முகவரி அச்சிட்டு வழங்கப்பட வேண்டும்.

மேற்கண்ட இரண்டு சட்டங்களும் ஏன் வந்தது தெரியுமா? தலைமை ஆளுநராக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸின் மனைவி, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு எல்லா நன்மைகளும் பெற்றிடப் பல பரிந்துரைகளைச் செய்தார்! இறுதியில் அந்தப் பரிந்துரைகள் பாலியல் அநாகரிகமாக உருவெடுத்தது. அதை ஒருவன் துண்டறிக்கையாக அச்சிட்டு வீதிதோறும் வழங்கிவிட்டான்! அவ்வாறு செய்தவன் யார்? என்பதை அறிந்திடக் காவல்துறை எவ்வளவோ முயன்றும்கூட முடியாமல் போய்விட்டது! பாவம், ஹேஸ்டிங்சுக்கு ஊழல் கெட்ட பெயர் ஒரு புறம், மனைவியால் இழிச் சொல் மறுபுறம் உண்டானது.

அத்தகைய ஓர் அவமானம் மறுபடியும் தலைமை ஆளுநர் பதவிக்கு வந்துவிடக் கூடாது அல்லவா? அதனால் அச்சகம், பத்திரிகை உரிமையாளர்கள் முகவரிகளைப் பத்திரிகையில் வெளியிடல் வேண்டும் என்ற கட்டளையை டல்ஹெளசி பிறப்பித்தார்! அதுதான் இன்றும் நாம் பத்திரிகையின் கடைசி பக்கத்தில் அச்சிட்டு வெளிவரும் imprint என்ற அடையாள அறிகுறி ஆகும்.

ஐந்தம்ச சட்டத்தின் மூன்றாவது சட்டம் : ‘ஞாயிற்றுக் கிழமைகளில் பத்திரிகைகளை வெளியிடக் கூடாது’ என்பதாகும்.

ஞாயிறு மனித குலத்துக்கு இயேசு படைத்த ஓய்வு நாள் அல்லவா? அந்த நாள் அரசு விடுத்துள்ள விடுமுறை நாள். அன்றைக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டுவிட்டால், எல்லாருக்கும் முனுமுனுப்புதானே! அதனால் ஓய்வு நாளில் பத்திரிகைகள் வெளியே வரக்கூடாது என்று சட்டம் இயற்றினார் டல்ஹெளசி பிரபு!

4. பணியிலே அமர்ந்துள்ள தலைமைச் செயலக அதிகாரிகள் பத்திரிகை வெளியே வரலாம் என்ற அனுமதியைக்