பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

பத்திரிகை ஓர் அறிமுகம்


அரச குடும்பம், ஒரு எஸ்டேட் என்றும், சமயத் தலைவர்கள், செல்வந்தர்கள் எனப்படுவோர் House of Lords பிரபுக்கள் சபையினர் என்றும், பொது மக்களால் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோர், House of Common அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றும், நான்காவதாக பத்திரிகை நிருபர்கள் அமர்ந்திருந்த Reportersகள் பகுதியைச் சுட்டிக்காட்டி, அதோ, அந்த நிருபர்கள் செய்யும் அரசியல் பணிதான் நான்காவது எஸ்டேட் என்று கூறிப் பெருமைப்படுத்திப் புகழ்ந்தார். அத்தகைய ஓர் அரசியல் வித்தகச் சிந்தனையாளர்களை நம்மால் இன்றும் மறப்பதற்கில்லை.

இந்தியா சுதந்திர உரிமை நாடாக உருப் பெற்றதற்குப் பிறகு, இங்கிலாந்து நாட்டு அரசியல் நிர்ணய வரலாற்றையே பெரும்பாலும் பின்பற்றி வருவதால், நமது மக்களாட்சியின் நாடாளுமன்ற நடவடிக்கைகளையே முதல் எஸ்டேட்டாகவும், அதன் நிர்வாகத் துறைகளை Executive இரண்டாவதாகவும், நீதித் துறையான Judicial-லை - இறைவன் தீர்ப்புக்குரிய முறை மன்றம் சார்புடையதை மூன்றாம் எஸ்டேட்டாகவும், பத்திரிகைத் துறையை நான்காம் எஸ்டேட்டாகவும் கருதி நாம் ஆட்சி நடத்தி வருகிறோம். இந்தியா உலகிலே மிகப் பெரிய ஜனநாயக நாடல்லவா? அதனால்-!