பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

219



இந்தச் சட்டம் 1867-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டிருந்தாலும், இன்று வரை, அதாவது 2005-ஆம் ஆண்டு வரையிலும் அது உயிரோடு நடமாடி வருகிறது. அந்தச் சட்டத்தின் நோக்கங்கள் பின் வருமாறு :

1. அச்சகம் நடத்துவோர், நீதிபதி ஒருவர் முன்பு உறுதி மொழிப் பத்திரம் எழுதித் தரவேண்டும்.

2. அச்சக உரிமையாளரும், பத்திரிகை வெளியிடுவோரும், எங்கே அதை அச்சடிக்கிறோம் என்ற இடத்தின் முகவரியை அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

3. அச்சடிக்கப்பட்ட பத்திரிகைகளின் இரண்டு பிரதிகளை அரசுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

4. பத்திரிகைகளைக் கொடுக்கத் தவறுகின்றவர்களுக்கு அபராதம் 2000 ரூபாய் அல்லது 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்படும்.

இவைதான், 1867-ஆம் ஆண்டின் பத்திரிகைச் சட்டத்தின் சீர்த்திருத்தங்களாகும்.

8. 1887-ஆம் ஆண்டு வந்த
நாடு கடத்தல் சட்டம். எண் - 27

ஆளுநர் ரிப்பன் பிரபுக்குப் பிறகு, 20 ஆண்டுகள் கழித்து, 1887-ஆம் ஆண்டில் ஜான் லாரன்ஸ், மேயோ பிரபு என்ற இருவரும் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.

இந்தச் சட்டத்தால் பத்திரிகைக்கு உண்டான லாபம் என்ன தெரியுமா? ஆங்கிலேயர் ஆட்சி பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்ட விக்கிமாதித்தன் கதை போல, பத்திரிகை நடத்துவோரைப் பழி வாங்கும் சூழ்ச்சிகளைப் பெற்றதுதான் லாபமாகும்.

ஆங்கில அரசுக்கு எதிரான கருத்துக்களை எழுதும் பத்திரிகை ஆசிரியர்கள், இந்திய எல்லைகளை விட்டே