பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

ஆறு நாடுகளின் உருவாக்கமே நமது குடியரசு சட்ட அமைப்பு



அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகமான தாய்மொழிப் பத்திரிகைகள் நடத்தப்படவில்லை. அதனால், சென்னை மாநிலப் பத்திரிகை வட்டத்துக்கு அதிக பாதிப்புகள் ஏதுமில்லை.

ஆனால், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், குறிப்பாக வங்காள மொழியில் வெளிவந்த ‘அமிர்தபசார்’ என்ற பத்திரிகையை அந்தச் சட்டம் வெகுவாகப் பாதித்ததால், இரவோடு இரவாக அந்த ஏடு மன மாறி இங்கிலீஷ் மொழிப் பத்திரிகையாகிவிட்டது.

லார்டு லிட்டன் பிரபுவுக்குப் பிறகு, மீண்டும் மனித நேயம் படைத்த ரிப்பன் பிரபுவே தலைமை ஆளுநராகப் பதவி ஏற்றார். அப்பாது கொடுங்கோலன் லிட்டன் சட்டத்தை அவர் திரும்பப் பெற்றுவிட்டார்.

10. 1908-ஆம் ஆண்டில் வெளிவந்த
குற்றத் தூண்டல் தடுப்புச் சட்டம்
(INSITEMENT OF OFFENCER ACT OF 1908)

நாட்டில் நடைபெறும், கொலை, கொள்ளை, திருட்டு போன்றக் குற்றங்களைத் தூண்டுகின்ற செய்திகளை, கட்டுரைகளை வெளியிடும் பத்திரிகைகள் மீது, அரசு நடத்துவோர் நீதிமன்றத்தில் முறையிட்டால், அந்தப் பத்திரிகைகளை, அச்சடிக்கும் அச்சகத்தை பறிமுதல் செய்யும் அதிகாரம் நீதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தது.

அந்த நீதிபதியின் தீர்ப்பு, பத்திரிகையாளர்கட்குப் பாதகமாக இருந்தால் அதை எதிர்த்து மேல் நீதிமன்றத்துக்குச் சென்று முறையீடு செய்திட 15 நாட்கள் கெடு கொடுக்கப்பட்ட வசதியும் ரிப்பன் பிரபு காலத்தில் வழங்கப்பட்டது.

லிட்டன் பிரபு ஆட்சியிலிருந்த இந்தச் சட்டத்திற்குப் பலியான பத்திரிகைகள், அச்சகங்களின் எண்ணிக்கை 963 ஆகும். அவருடைய ஐந்தாண்டுக் கால ஆட்சியில், பத்திரிகைகள் கட்டியிருந்த Deposit தொகை, அதாவது பறிமுதலான பிணையத் தொகை எவ்வளவு தெரியுமா? ஐந்து