பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



2
பத்திரிகைகள் தோன்றும் முன்பு
செய்திகள் எப்படிப் பரவின!


லக மக்கள் ஆங்காங்கே பல் குழுக்களாகக் கூடி வாழ்ந்த காலத்தில் இருந்தே, ஓரிடத்திலுள்ள வாழ்வியல் சிறப்புச் செய்திகளை மற்றோரிடத்திற்குப் பரவிட, பரப்பிட, பரிமாறிக் கொண்டாடிடும் திட்டங்கள் பல இயற்கையாகவே நடந்திருக்கின்றன.

ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை, வேறோர் நாட்டிலே உள்ள மக்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? அதற்கான ஓர் ஆர்வம் இருக்காதா என்ன?

அவரவர் பேச்சு மொழிகள், அதாவது இலக்கிய, இலக்கணமுடையத் தாய் மொழிகள் உருவாவதற்கு முன்பே, மேற்கண்ட ஆர்வம் எழத்தானே செய்யும்? ஏன்? எழுந்துள்ளதே!

அந்த விருப்பத்தை ஊமைச் செய்திகள் மூலமாக, ஒலிகளின் வாயிலாக மக்கள் குழுக்கள் வாழும் இடங்களில் கொட்டும் பறையோசை சார்பாக அவர்கள் அடையாளம் காட்டிக் கொண்டு பழக்கப்பட்டிருந்தார்கள்.

வேறு சில நாடுகளில் - கல்வெட்டுகள், கற்றூண்கள், கற்பாறை எழுத்துச் செதுக்கல்கள், கற்கோயில் சிற்ப