பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

231



இந்த நோக்கத்தைத் தவிர்க்க வேண்டும் என்று எண்ணிய R.C.S.சர்க்கார், தனது ‘இந்தியாவில் பத்திரிகைகள் நிலை’ என்ற நூலில் ‘பத்திரிகைச் சுதந்திரம் என்பது ஒரு தேவையான தீமையாகும்’ என்கிறார்.

பத்திரிகைச் சுதந்திரத்தைச் தவறாகப் பயன்படுத்தும் இதழ்களுக்கும், சரியாக நடத்தும் பத்திரிகைகளுக்கும் இடையே உள்ள கட்டுப்பாடுகளில், ஒரு நடுநிலை நோக்கு உருவாக்கப்பட வேண்டும்’ என்று அவுர் குறிப்பிட்டுள்ளார்.

‘சர்க்கார்’ எழுதிய நோக்கத்திற்கு மாறாக, ஆங்கிலேயர் ஆட்சி, பத்திரிகைகள் மீது ஏவி விட்ட அடக்கு முறைகளையும் நாம் உணர்ந்தால்தான், அவர் ஏன் அவ்வாறு குறிப்பிட்டார் என்பதின் அருமையை நம்மால் உணர முடியும்.

இந்தியாவில் ஆங்கில ஏகாதிபத்தியம் ஏறக்குறைய இரண்டரை நூற்றாண்டாக நடைபெற்று வந்தது. அந்தக் கால கட்டத்தில் இந்திய மொழிகளில் பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு நடந்தும் வந்தன.

அந்தப் பத்திரிகைகள் தனது நாட்டின் அடிமை விலங்கைத் தகர்த்தெறியத் தீவிரமாக உழைத்தன. ஆங்கிலேயர் ஆட்சி இந்தியர்களை மிருக உணர்ச்சிகளோடு நடத்தி வந்தக் கொடுமைகளை எதிர்த்து அவை எழுதின. அரசாங்கத்தில் இந்திய மக்களுக்குரிய வாழ்வியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென்பதற்காக அக்காலப் பத்திரிகைகள் போராடின. அதற்காகவே, அகில இந்திய தேசியக் காங்கிரஸ் பேரவை என்ற இயக்கம் 1885-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது.

அந்த நேரத்தில் மக்களுக்குத் தேசிய சுதந்திர உரிமைகள் தேவை என்பதற்காக இந்தியர்களால் ஆங்கிலேயர் ஆட்சியிடம் ஏராளமான மனுக்கள் கொடுக்கப்பட்டன. அவற்றை எல்லாம் அந்த அன்னிய அரசு மதிக்கவில்லை.

இங்கிலாந்திலிருந்து வெள்ளையர்களை கொண்டு வந்து, இந்திய அரசு ஆட்சிப் பதவிகளில் வலிய வலியத் திணித்து, இந்திய மக்களின் சாதாரண சமத்துவ உரிமைகளைக்கூட