பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

பத்திரிகை வளர்ச்சிகளை அழிக்கும் அடக்குமுறைச் சட்டங்கள்!


சட்டத்தின் 499-ம் பிரிவுப்படி எந்தக் குற்றம் அதற்குப் பொருந்துகிறதோ, அதற்கேற்றவாறு, 500-ஆம் பிரிவுச் சட்டப்படி தண்டனையை ஏற்கவேண்டிய நிலை எழும்.

ஒருவரை அவமதிக்கும் வகையில் பேசுவதோ அல்லது எழுதுவதோ, சைகைகள் மூலம் வெளிப்படுத்துவதோ, அவமதிப்புக் குற்றத்தின்கீழ் வருமானால், அதற்கு மூன்று காரணங்கள் அமைந்திருக்கவேண்டும். அவை:

1. எந்த ஒரு மனிதனையாவது அவமதித்திருக்க வேண்டும்.

2. அத்தகைய அவதூறைப் பேசிய அல்லது மற்றவர்கள் படிக்க வேண்டுமென்று எழுதிய சொற்களாலோ, ஜாடை மாடைகளால் அதைப் புரிந்து கொள்ளக்கூடிய மறைமுக முறைகளாலோ அந்தக் குற்றம் அமைந்திருக்க வேண்டும்.

3. அந்த அவதூறு ஒருவரின் பெருமையைச் சிறுமைப் படுத்தும் குறிக்கோளோடோ அல்லது அவரின் சமுதாயத் தகுதிகளை அவமானப்படுத்தப்பட வேண்டும் என்பதை வேண்டுமென்றே அறிந்து எழுதப்பட்டதாகவோ, பேசப்பட்டதாகவோ இருக்கவேண்டும்.

அவதூறுத் தொடர்பானவற்றை - வெறுப்பைக் - கிண்டலை, கேலியைத் - தூண்டக் கூடியவையாக இருக்க வேண்டும்.

அதனால், சம்பந்தப்பட்டவரை மக்கள் வெறுத்தோ, புறக்கணித்தோ, ஒதுக்கப்படக்கூடிய சூழ்நிலைகளோ அமைந்திருக்க வேண்டும்.

அந்த ஆளின் பணியையோ, தொழிலையோ பாதித்து அவமானப்படுத்தியதாகவோ அந்தக் குற்றம் இருக்கவேண்டும். அல்லது அவரது வியாபாராத்தைச் சீர்குலைப்பதாக அது இருந்தாலும் குற்றமாகும்.

விதிவிலக்குகள்:

ஒருவரை அவமதிப்புச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட பத்து சூழ்நிலைகளில் தண்டிக்க முடியாது என்று 499ம் சட்டப் பிரிவு