பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

235


விதி விலக்குக் கூறுகின்றது. அந்தப் பிரிவு கூறும் பத்து வகை விதிவிலக்குகள் இவை:

1. பொது நலனை எண்ணி உண்மையை வெளியீடாமல் இருப்பது.

2. பொது நன்மைகளைக் க்ருதி சிலவற்றை வெளியிடுவது.

3. அரசில் பணிபுரியும் பணியாளர்களைப் பற்றி நியாயமான எண்ணங்களைக் கூறுவது.

4. பொது நலன்களுக்குத் தேவையானது என்று தெரிந்தால் அதற்காக வாதாடுவது.

5. நல்ல எண்ணங்களோடு வழக்கு மன்ற நடவடிக்கைகளை வெளியிடுவது.

6. நீதிமன்ற தீர்ப்புப் பற்றியோ, சான்று பற்றியோ, நல்ல எண்ணத்தோடு கருத்தறிவிப்பது.

7. பொது நடவடிக்கைகள் பற்றிப் பொது நல நோக்கத்தோடு அவற்றை விமர்சனம் செய்வது.

8. சட்டப்படி அதிகாரம் உடையவர்கள் சட்ட எல்லைக்குள் கருத்து அறிவிப்பது.

9. அதிகாரத்தில் உள்ளவர்களின் குறைகளை நற்சிந்தனைகளோடு குறிப்பிட்டுக் கூறுவது.

10. பொது நன்மைகளைக் குறித்தோ, தனிப் பட்டவர்களையோ காப்பாற்றுவதற்காகச் சிலரைக் குறைக்கூறி, பொதுநலனுக்காக ஒருவரை எச்சரிக்கைச் செய்வது ஆகிய பத்து வகைச் சூழ்நிலைகளும் அவமதிப்புக் குற்றமாகாது.

வழக்குத் தொடுப்பு:

1973-ம் ஆண்டின் குற்றவியல் வழக்குத் தொடர்பின்படி 199(1) யார் அவமதிப்புக்கு ஆளானார்களோ, அவர்கள்தான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியும். ஆனால், இந்திய