பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



12


நாடாளுமன்ற நடவடிக்கைகளில்:
பத்திரிகைகளைப் பாதுகாக்கும்
ஃபெரோஸ் காந்தி சட்டம்!


க்களாட்சி எனப்படும் ஜனநாயகத் தத்துவத்திற்கு, அரசியல் சட்டம், நாடாளுமன்றம், நீதிமன்றம் மூன்றும் விலைமதிக்க முடியாத மும்மணிச் செல்வங்களாகும். அத்துடன் நான்காவதாக நடமாடும் நான்மணிச் செல்வம் பத்திரிகைகளாகும். இவை நான்கும் ஒரு நாட்டிற்குத் தேவையான மதிப்பையும், மரியாதையையும், பெரும் புகழையும் தேடித் தருகின்ற ‘நான்மணிக் கடிகை’ ஆகும்.

ஒரு நாட்டின் ஆட்சியை ஏற்று நடத்துவது நாடாளுமன்றமும், அந்தந்த மாநில சட்டமன்றங்களுமாகும். அதனால், அந்த ஆட்சிமன்றங்களில் நடைபெறும் செய்திகளை நாட்டு மக்களுக்குத் தெரிவிப்பது பத்திரிகைக்ளின் மக்களாட்சிக்குரியத் தொண்டுகளாகும்.

அந்த மக்களாட்சியின் தூது தத்துவத்தைப் பத்திரிகைகள் கண்ணியத்துடனும், கட்டுப்பாட்டுடனும், பொறுப்புணர்வுகளுடனும், சேவை மனப்பான்மையுடனும், கவனத்துடனும் நிறைவேற்ற வேண்டும்.

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் நடைபெறும் அரசியல், பொருளியல், சமுதாயவியல் நடவடிக்கை-