பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

பத்திரிக்கைகளைப் பாதுகாக்கும் ஃபெரோஸ் காந்தி சட்டம்!


களைப் பத்திரிகைகள் எந்தவிதச் செய்திக் கலப்படமும் செய்யாமல் ‘உள்ளது உள்ளபடியே’ நாட்டு நன்மை நாடி பத்திரிகைகளில் வெளியிடவேண்டும்.

பொறுப்போடு அவ்வாறு வெளியிடாவிட்டால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமை மீறல் குற்றமோ, ஆட்சிமன்றங்களை அவமதித்தக் குற்றமோ பத்திரிகைகளுக்கு வந்துவிடும்.

பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுவிட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அந்தந்த ஆட்சி மன்றங்களில் ஆற்றும் பணிகளைப் பத்திரிகைகள் கவனக்குறைவு இல்லாமல் வெளியிடவேண்டும்.

தவறு நேர்ந்தால் அந்தந்த ஆட்சி மன்றங்களின் பணிகளுக்கு இழுக்கு நேர்ந்ததாகக் கருதி, பத்திரிகைகள் மீது உரிமை மீறல் குற்றமும், ஆட்சி மன்றங்களின் அவமதிப்பும் ஏற்பட்டுவிடும். ஆகவே, எந்தவிதக் குறைகளும் நேராதபடி அவற்றின் நடவடிக்கைகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது பத்திரிகைகளின் கடமை.

உரிமை மீறல் குற்றம் என்றால் என்ன? என்பதற்கான சட்ட விளக்கம் திட்டவட்டமாக எதுவும் இல்லையென்றாலும், ஆட்சி மன்றங்களின் நடவடிக்கைகளை தவறாக வெளியிடுதலும், சபைகளது நடவடிக்கைகளை வேண்டுமென்றே சிதைத்துப் பதிப்பித்தலும், அவைத் தலைவர்கள் அவை நடவடிக்கைகயை வெளியிடக்கூடாது என்று நீக்கியப் பகுதிகளை வெளியிடுதலும், சபைகளின் உரிமைகளை மீறல் என்ற பெயரில் பத்திரிகைகள் மீது குற்றங்கள் கூறப்படுகின்றன. -

இவ்வாறு உரிமை மீறல்களைச் செய்யும் பத்திரிகைகளை தண்டிக்கும் அதிகாரம் வழக்குமன்றங்களுக்கு இல்லை. அதற்கான முழு முதல் அதிகாரம் நாடாளுமன்றம், சட்ட மன்றங்களுக்கு மட்டுமே உண்டு.

எடுத்துக்காட்டாக, 1987-ம் ஆண்டில் ‘ஆனந்தவிகடன்’ என்ற தமிழ்ப் பத்திரிகையில் வெளியான ஒரு கேலிச் சித்திரம்