பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

பத்திரிக்கைகளைப் பாதுகாக்கும் ஃபெரோஸ் காந்தி சட்டம்!



2. எரியீட்டி மீது உரிமை மீறலா?

தமிழ்நாட்டுச் சட்டமன்ற நடவடிக்கையை ஒரு கேலிச் சித்திரத்தின் மூலமாக அவமதித்துவிட்டது ‘ஆனந்தவிகடன்’ பத்திரிகை என்பதற்காகத் தண்டனை தந்த அவமதிப்பு சட்டம் வாழும்போதுதான் ‘மாலைமணி’ என்ற நாளேட்டில் வெளிவந்த ‘எரியீட்டி’ என்ற ஒரு கட்டுரை ஃபெரோஸ் காந்தியின் பாதுகாப்புச் சட்டத்தின் பலனைப் பெற்று மீண்டது.

1967-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தி.மு.கழகக் கூட்டணிச் சார்பாக, தமிழ்நாட்டுச் சட்டப்பேரவைத் தலைவராக இருந்த ‘தினத்தந்தி’ நிறுவனர் சி.பா. ஆதித்தினார், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், சென்னிமலையிலோ அல்லது பெருந்துறை தொகுதியிலோ போட்டியிட்ட ஒரு சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலசுப்பிரமணியம் போன்றவர்கள் உதய சூரியன் சின்னத்தில் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார்கள்.

கூட்டணி சார்பாக வெற்றி பெற்ற சோசலிஸ்ட் பாலசுப்பிரமணியம், கூட்டணியில் இருந்துகொண்டே தி.மு.கழக நடவடிக்கையை எதிர்த்துப் பொது மேடைகளில் பேசி வந்தார்.

அவருடைய அரசியல் தாக்குதலுக்கு மாலைமணி நாளேட்டின் ‘எரியீட்டி’க் கட்டுரைப் பகுதியில் பதில் எழுதவேண்டிய நிலை ஏற்பட்டது. ‘எரியீட்டி’க் கட்டுரையின் நோக்கம் என்னவென்றால்:

நிலவை உடைத்து அதன் ஒளியை மையாக்கி,
தென்றலின் இதமான குளிர் நடையிலே
எழுதுகோலை உலாவவிட்டு தி.மு.கழக அரசியல்
நண்பர்களை வரவேற்று வாழ்த்துப் பாடும்
அன்புரைப் பண்பு ‘எரியீட்டி’யின் நோக்கமாகும்.
அந்த நண்பர்கள் அரசியலில் துரோகிகளாக
மாறும்போது, சூரியன் கக்கும் கனல்களை
மையாக்கி, சித்திரைத் திங்கள் கோடையிலே
எழுதுகோலை துவைத்துக் கொதிக்கக் கொதிக்க,