பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

241


கோபம் கொந்தளிக்கத் துள்ளுநடை போட்டுக்
கண்டன நெருப்பைக் கக்கித் தாக்கும்
குணமுடையது ‘எரியீட்டி’.

மேற்கண்ட குணங்களோடு அந்த சோசலிஸ்ட் உறுப்பினரின் கூட்டணித் துரோகத்தைச் சாடியது. அக்கட்டுரைக்குத் தலைப்பு என்ன தெரியுமா? ‘உதய சூரியன் ஒளியிலே மலம்கூட விளம்பரம் பெறுகிறது’ என்பதுதான். இதைப் படித்த சோசலிஸ்ட் உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை நடக்கும்போது, ‘மாலைமணி’ பத்திரிகை மீது உரிமை மீறல் பிரச்சனையைக் கொண்டு வந்தார். ‘எனது தொகுதி மக்களுக்கு என்னைப் பணியாற்ற விடாம்ல் மாலைமணி எரியீட்டி மிரட்டித் தடுக்கின்றது” என்று பேசினார்.

அறிஞர் அண்ணா அவர்கள் அப்போது முதலமைச்சர் சி.பா. ஆதித்தனார் சட்டப் பேரவைத் தலைவர். அவர்கள் ஒப்புதலுடன் சோசலிஸ்ட் உறுப்பினரின் உரிமை மீறல் தீர்மானம் வாத - விவாதத்திற்குப் பிறகு அது உரிமை மீறல் குழுவின் ஆய்வுக்குச் சென்றது. என்ன முடிவு என்று கேட்கிறீர்களா?

சட்டப்பேரவை ஆய்வுக்குழுவுக்குச் சென்ற ஓர் உரிமை மீறல் தீர்மானம், சட்டப்பேரவையில், மூன்று நாட்களல்ல, மும்முறை மன்றம் கூடிக் கலைந்துத் துவங்கும்போது, அந்த தீர்மானத்தைப் பேரவை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு Renewal செய்யாமல், தீமானத்திற்குப் புத்துயிர் அளிக்காவிட்டால், புது உரமூட்டப்படாவிட்டால் அந்தத் தீர்மானம் தானாகவே செத்துவிடும். அதற்கேற்ப, அந்த தீர்மானம் இயற்கையாகவே இறந்த பிணமாகிவிட்டது.

அந்த ‘எரியீட்டிக் கட்டுரை எழுதியவர் இந்தப் புத்தகத்தை எழுதிய புலவர் என்.வி.கலைமணி என்பவர்தான். ஏன் இதை இங்கே கூறுகிறோம் என்றால், எந்தக் கட்டுரை எழுதினாலும், எவரைப் பற்றி எழுதினாலும், உணர்ச்சிக்குப் பலியாகி உரிமை மீறல் பிரச்சனைக்கு எந்த பத்திரிகையாளரும் ஆளாகி விடக்கூடாது என்பதற்காகவே சுட்டிக் காட்டினோம். ஃபெரோஸ் காந்தியின் பத்திரிகைப் பாதுகாப்புச் சட்டம்