பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

பத்திரிக்கைகளைப் பாதுகாக்கும் ஃபெரோஸ் காந்தி சட்டம்!


செய்தனுப்புவது அல்லது பத்திரிகைகளில் வெளியீடு செய்வதுபோன்ற செயல்கள் எல்லாமே குற்றங்கள்தான் என்று சட்டம் அறிவிக்கின்றது.

நாட்டிலே அமைய இருக்கின்ற அல்லது இயங்கிக் கொண்டிருக்கின்ற அணு உற்பத்தி நிலையங்கள் பற்றிய அதிகாரம் பெற்றவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு அந்த அணு சம்பந்தப்பட்டச் செய்திகளை வழங்குவதை, 1962-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட Atomic Energy என்ற அணுசக்தி சட்டக் குற்றங்களாகும் என்று சுட்டிக் காட்டுகின்றது.

ஒரு நடைமுறை செயலை இரகசியமானதா - இல்லையா என்று முடிவுகட்டுவது சிக்கலானதுதான். என்றாலும், சில நேரங்களில் அலுவலர்களும், அரசியல் தலைவர்களும் தங்களுடைய தவறுகள் வெளியே தெரியாமல் இருக்க, பலவற்றை இரகசியங்கள் என்று மறைத்து வைக்கலாம். இவற்றை எல்லாம் மக்கள் நலனுக்காகத் துப்பறிந்து பத்திரிகைகள் அம்பலப்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக, இந்திய அரசு அயல்நாட்டில் வாங்கிய இராணுவ தளவாடங்களில் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் “Indian Express’ நாளேடு குற்றம் சாட்டியது.

சாட்டியக் குற்றத்தை மெய்ப்பிக்க சில ஆவணங்களைப் பத்திரிகையில் வெளியிட்டது. அந்த ஆவணங்களை அச்சிட்டு வெளியிட்டதே அலுவலக இரகசியச் சட்டத்தின் கீழ்வரும் குற்றம் என்று இந்திய அரசு எண்ணியது.

5. பத்திரிகைகள் - புத்தகங்களைப்
பதிவு செய்து பாதுகாக்கும் சட்டம்

இந்தச் சட்டம் ஆங்கிலேயர் ஆட்சியில் 1867-ம் ஆண்டில் இயற்றி அமல் செய்யப்பட்ட பத்திரிகைச் சட்டம். இதற்குப் பெயர் பத்திரிகைகள், புத்தகங்கள் பதிப்புச் சட்டம் ஆகும். The press and Registration of Books Act.

இந்தச் சட்டத்தில் 1940, 1956ம் ஆண்டுகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. இது பத்திரிகைகளை