பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

247


ஒழுங்குப்படுத்தக் கொண்டுவரப்பட்டது. ஆனால், பத்திரிகைச் சுதந்திரத்தைக் கட்டப்படுத்துவது இதன் நோக்கமன்று. இந்தியாவில் வெளியிடப்படும் பத்திரிகைகளையும், புத்தகங்களையும் இந்த சட்டம் பாதுகாக்க வழிசெய்கின்றது.

பத்திரிகைகள்:

தில்லியிலிருக்கும் தலைமைப் பதிவாளரிடம் பத்திரிகை சம்பந்தப்பட்ட எல்லா விவரங்களையும் கொடுக்கவேண்டும் என்று இந்தச் சட்டம் அறிவிக்கின்றது.

பத்திரிகை வெளியீட்டாளர், உரிமையாளர், ஆசிரியர் ஆகியோர் மாவட்ட நீதிபதியிடமோ, பெரு நகர நீதிபதியிடமோ வாக்குறுதி வழங்கி, பெயர் பதிவு செய்த பின்புதான் பத்திரிகைகளை வெளியிட வேண்டும். ஒரு பத்திரிகையை எப்படிப் பதிவு செய்து நடத்தப்படவேண்டும் என்ற விவரத்தை இந்தச் சட்டம் கூறுகின்றது.

ஒவ்வொரு இதழிலும் அச்சிட்டவர், வெளியிட்டவர், ஆசிரியர் பெயர்கள், அச்சிட்ட இடம், வெளியிட்ட தேதி ஆகியவை தெளிவாக அச்சிட்டிருக்கவேண்டும்.

பத்திரிகையை வெளியிடுபவர்கள், செய்தித் தாட்கள் பதிவாளர் Registrar of News papers கேட்கின்ற விவரங்களையும் கொண்ட ஆண்டு அறிக்கைகளைக் கொடுக்க வேண்டும்.

இந்தச் சட்டத்திற்கேற்ப,ஆங்கிலம், இந்தி, உருது மொழிகளில் வெளிவரும் ஒவ்வொரு இதழையும் புதுதில்லியிலே உள்ள பதிவாளருக்கு அனுப்ப வேண்டும்.

பிறமொழி இதழ்கள் குறிப்பிட்ட வட்டார வெளியீட்டுச் செய்தி நிறுவனங்களுக்கு Press information Bureauவுக்கு ஒரு பிரதியை அனுப்பி வைக்கவேண்டும்.

6. ஆபாச வெளியீடு
தடைச் சட்டம்

பத்திரிகைகள் எல்லாச் செய்தி, கருத்து வடிவங்களையும் எழுதலாம். அதற்கு உரிமை உள்ளது. ஆனால் மக்கள் மனதை,