பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

23


அரும்பாடுபட்டது. இமயம் முதல் குமரியின் முக்கடல் எல்லை வரை வைதீக மதம் பரவி வாழ்ந்து ஆன்மீகச் செல்வாக்கு மேம்பெற்றிருந்தது.

இந்து மதத்தில் உள்ள சமய, மூடப் பழக்க வழக்கங்களைக் கண்டித்ததோடு இராமல், அவற்றை அகற்றிடப் புத்த சமயமும், சமண சமயமும் போராடும் சீர்திருத்த இயக்கங்களாகவே தோன்றி, பிறகு மதங்களாகவும் அவை மாறி விட்டன.

இவ்வளவையும் ஏன் இங்கே குறிப்பிடுகிறோம் என்றால், எந்த ஒரு பத்திரிகையும் தோன்றாத அந்தக் காலத்தில் - அதாவது ஆதி காலத்தில், இதழியல் என்ற கருவே எந்த அறிஞர் குழுக்களின் மூளைகளிலும் சூலாகாத மலட்டு அறிவு படர்ந்திருந்த நேரத்தில், இந்த மத எழுச்சிக் கருத்துக்கள், இந்தியாவில் அவரவர் அடியவர்களால் மதநெறி பரப்பல் என்ற செய்திகளாக பரவிக் கொண்டிருந்ததை எவராலும் மறுக்க முடியாது; மறக்க முடியாது.

வெளிநாடுகளிலே உருவாகி வளர்ந்து வந்த சமையங்களும், அவரவர் மத ஊழியர்களை இந்தியா மண்ணுக்கு அனுப்பி தத்தம் நெறிகளை அச்சமின்றிப் பிரச்சாரம் செய்து வந்த செய்திகளையும், உலக வரலாறு நமக்கு உரைத்துக் கொண்டுதான் உலா வருகின்றது.

அந்த உலகச் சமய உருவாக்கப் பண்பாடுகளின் வளர்ச்சிகளில் அவ்வப்போதைய காலச் சூழல்களுக்கேற்ப பல மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. குறிப்பாக : தனி மனிதனுடைய உணர்வுகளும், செயல்களும், பழக்க வழக்கங்களும், பண்பாட்டு வளர்நிலைகளாவது ஒருமுறை!

தனி மனிதர்கள் ஒன்றாகக் கூடி வாழ்வதால் உருவாகும் சமூகங்களின் பண்பட்ட முன்னேற்ற்ம் அடுத்த நிலை.

சமூகங்கள் பல சேர்ந்து ஒரு சமுதாயமாகப் பின்னிப் பிணைந்து இயங்கும் பொழுது உருவாகும் வாழ்க்கை நெறி, பழக்க வழக்கங்கள், கலை உணர்வு, சிந்தனை முதிர்ச்சி,