பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

249



அதாவது, இலக்கியம், நாடகம், இசை வடிவம், கலைசார்ந்த கற்பனைப் படைப்புகள் எவையாக இருந்தாலும் அவை படைப்பாளிகள் சொத்தாகும். இந்த உரிமையைப் பாதுகாக்க அரசுச் சட்டம் துணை நிற்கின்றது.

சட்ட விளக்கம்:

இதற்கான பாதுகாப்பு பதிப்புரிமைச் சட்டம் முதன் முதலாக 1941-ம் ஆண்டில் இயற்றப்பட்டது. தற்போதும் இந்தச் சட்டம் அமலில் உள்ளது. இந்தச் சட்டத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு 1957-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஒன்றின் பதிப்புரிமை ஒருவருக்கு இருக்க வேண்டுமானால், அது படைப்பாளிகளின் சொந்தப் படைப்பாக இருக்கவேண்டும்.

மற்றொன்றைப் பார்த்துப் படைத்த ஒன்றுக்கு ஒருவர் உரிமை கொள்ள முடியாது. கருத்துக்களுக்கோ, பாடப்பொருளுக்கோ, கருப்பொருளுக்கோ, வரலாற்று நிகழ்ச்சிகளுக்கோ யாரும் உரிமை கொண்டாட முடியாது. ஏனென்றால் அவை எல்லாம் பொதுச் சொத்துக்களாகும்.

ஒரு குறிப்பிட்ட முறையின் வடிவத்தில் ஒன்றை வெளியிடும்பொழுதுதான் அதற்குப் பதிப்புரிமை உண்டு.

பதிப்புரிமைச் சட்டத்தின் 45ம் பிரிவு பதிப்புரிமையைப் பதிவு செய்துகொள்ள வாய்ப்பளிக்கின்றது. ஆனால் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இலக்கியப் படைப்புகள், இசை, நாடகம் போன்றவற்றுக்குப் பதிப்புரிமை படைத்தவர்களின் வாழ்நாள் முழுவதும் அவருக்கே சொந்தமாக இருக்கும்.

அவர் காலத்திற்குப்பிறகு ஐம்பதாண்டுகளுக்குப் பதிப்புரிமை அவரது சந்ததிகளுக்கு உண்டு.

புகைப் படங்களுக்குப் பதிப்புரிமை - 50 ஆண்டுகளுக்கு அவற்றை எடுத்தவர்களுக்கு உண்டு. இந்தக் குறிப்பிட்டக் காலத்திற்குப் பிறகு அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.